jump to navigation

ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் SMS வருது ? July 29, 2010

Posted by anubaviraja in குட்டி கதைகள், நகைச்சுவை, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , , , , ,
11 comments

நமக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் பார்வர்ட் SMS வருதா இல்ல உங்க எல்லாருக்கும் வருதான்னு தெரியல ஆனாலும் ஒரு SMS அனுப்புரதுக்கு ஸ்ரீஹரிகோட்டா ல ராக்கெட் செய்ற அளவுக்கு யோசிச்சி அனுப்புறது தான் நம்ம ஆளுங்க வழக்கம் 🙂 🙂

கொஞ்சம் சாம்பிள் இங்க படிச்சு பார்த்தா உங்களுக்கே புரியும் ….

அம்மா : திப்பு சுல்தான் யாரு ??

பையன் : (கொஞ்சம் நேரம் யோசிச்சிட்டு ) தெரியாது ..

அம்மா : ஒழுங்கா பாடத்து மேல கவனம் வச்சா தெரியும்

பையன்: சரிம்மா புவனா யாரு ??

அம்மா : யாருடா ??

பையன்: ஒழுங்கா அப்பா மேல கவனம் வச்சிருந்தினா தெரிஞ்சிருக்கும் 😉

லேட்டஸ்ட் தற்கொலை கடிதம்

————-

————-

————-

நான் விஜய் படத்துக்கு போகிறேன் என்னை யாரும் தேட வேண்டாம்

அப்புறம் ஒரு பஞ்ச் டயலாக் :

டாப் அப்  போட்டு SMS அனுப்பும் நண்பனை நம்பு

மேக் அப் போட்டு மிஸ்ட் கால் குடுக்கும் பெண்ணை நம்பாதே 🙂

அடுத்தது தான் ரொம்ப வில்லங்கமான SMS

படித்த உடன் பார்வர்ட் பண்ணவும்

அப்புறமா ?? யோவ் உண்மையிலேயே அந்த SMS ல அது மட்டும் தான் யா இருந்தது

அப்புறம் கடைசியா :

கண்கள் பேசும் வார்த்தைகளுக்கு ஆயிரம் அர்த்தம்

உதாரணத்துக்கு

நீங்க ஒரு பொண்ண பார்த்து சிரிக்கிரிங்க அப்போ

அந்த பொண்ணு

அப்படியே வானத்த பார்த்தா – இந்த மூஞ்சிக்கு லவ் ஒண்ணு தான் கொறைச்சல்ல்ன்னு அர்த்தம்

கால பார்த்தானா –  உங்களுக்கு செருப்படி நிச்சயம்

சைடுல பார்த்தா – அவ அப்பன் வெப்பனோட வரான்னு அர்த்தம்

உங்கள பார்த்து சிரிச்சா – உங்களுக்கு குவாட்டர் கன்பார்ம் 😉

சிரிச்சதேல்லாம் போதும் போய் வேலைய பாருங்க .. என்னது சிரிப்பு வரலையா ?? அப்போ நான் நெக்ஸ்ட் மீட் பண்றேன்….  வர்ட்டா …

பின் குறிப்பு : இதுல நெறைய SMS பார்வர்ட் பண்ணது அன்பு தம்பி மாதேஷ் அவருக்கு என்னோட  நன்றி ..  (இதெல்லாம் சொல்லன்னும்ல பா 😉 )

சின்ன வயசுல விளையாண்ட Mario… July 27, 2010

Posted by anubaviraja in நகைச்சுவை, பிடித்தவை, ரசித்தவை.
2 comments

எல்லாரும் சின்ன வயசுல ஒரு வீடியோ கேம் பைத்தியமா அலஞ்சிருப்போம். அந்த வகையில மரியோக்கு  நான் ரொம்ப பெரிய பேன் … அதுல எல்ல லேவளையும் முடிக்கிறதுக்கு சோறு தண்ணி இல்லாம பல நாள் வேலயடிருப்பேன்.

ஊருல இருந்து எங்க பெரியம்மா பயன் கிட்ட கடனா வாங்கிட்டு வந்த வீடியோ கேம் வச்சி  ஊருக்குள்ள பெரிய அளப்பறைய கேளப்பிகிடிருந்த காலம் அது …

இப்போ கொஞ்ச நாள் முன்னாடி YouTube இந்த வீடியோ பார்த்தேன். ஏதோ காலேஜ் பாங்க்சன் போல .. பயபுள்ளைங்க பின்னி பெடல் எடுத்துருக்காங்க … நிங்களே பாருங்க …

எல்லாமே நல்லா சின்க்க் ஆச்சா??? ஹையோ ஹையோ .. போங்கப்பா .. போய் வேலை வெட்டியா பாருங்க …

நான் நெக்ஸ்ட் மீட் பண்றேன் … 😉

500 ரூபாய்க்கு கம்ப்யூட்டர் … இந்தியா வல்லரசு ஆகுதுங்கோ July 27, 2010

Posted by anubaviraja in செய்திகள், நகைச்சுவை, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , , , , , , ,
4 comments

எல்லாருக்கும் வணக்கம்… போன வியாழக்கிழமை டெல்லில … (ரைட் விடுங்க .. டெல்லில நடந்தத டெல்லில நடந்ததுன்னு தான பா சொல்ல முடியும் .. நான் என்ன சூரியன் கவுண்டமணியா ?? )

எங்க விட்டேன் ஆங் .. டெல்லில நம்ப மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபில் ஒரு சூப்பர் அனௌன்ச்மென்ட் குடுத்துருக்கார் பா .. 1500 ரூபாய்க்கு ஒரு டச் ஸ்க்ரீன் மினி கம்ப்யூட்டர் வெளியிட போறாங்களாம் .. சூப்பர்பு … கலக்கிட்டிங்கல்ல .. அந்த வீடியோ கீழ பாருங்கோ …

மொதல்ல ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு வித்துட்டு அப்புறம் இதோட விலைய படி படியா கொறைச்சி ஐநூறு ரூபாய்க்கு கொண்டு வர போறாங்களாம் … இதோட சிறப்பம்சம் என்னனா

  • 2GB Ram
  • Hard Disk கெடையாது
  • Memory Card  போட்டுக்கலாம்
  • Wi-fi இன்டர்நெட் சப்போர்ட் பண்ணும்
  • டச் ஸ்க்ரீன்
  • Linux Operating System
  • பிரவுஸ் பண்ணலாம்
  • படம் பார்க்கலாம்
  • பாட்டு கேட்கலாம்
  • டாகுமெண்ட் பார்க்கலாம்
  • இன்னும் நெறைய …

இத தயார் பண்ணுறதுக்கு கம்பெனிகளோட  ஆதரவ அரசாங்கம் கேட்டிருக்கு ..

அதுக்குள்ள … தைவான்ல ஒரு கம்பனி கேட்டிருக்காஹோ

அமெரிக்கால இன்டெல் கேட்டிருக்காஹோ ..

இன்னும் என்னென எல்லாம் நடக்க போகுதோ .. இந்தியால இருக்குற எல்லா மாணவர்களுக்கும் தகவல் தொழில் நுட்பம் போய் சேருவதற்கு இது ஒரு ஆரம்ப கட்டம் ன்னு சொல்லலாம்  🙂

ஜெய் ஹோ !! ஜெய் ஹோ !! 😀

அப்புறம் மக்கா…  அவசர பட்டு இத விலை குடுத்து வாங்கிராதிங்க … 2011 பொது தேர்தல்ல அய்யா நம்ப எல்லாருக்கும் இத அறவே இலவசமா குடுத்தாலும் குடுப்பாரு 😉 😉