jump to navigation

இரும்புப் பறவையே ..நீயெங்கே? April 1, 2014

Posted by anubaviraja in கவிதை, நடந்தவை.
add a comment

Dark-Sea-550x550

 

வானில் பறந்தாய்.. மாயமானாய்..

கண்டம் தாண்டி போனாயோ?

காட்டில் ஒளிந்துகொண்டாயோ?

வல்லுறு தூக்கிச் சென்றதோ?

கடல்வேந்தன் கூட்டிக்கொண்டானோ ?

றெக்கைகளை எங்கோ மறைத்தாயோ?

(more…)

தமிழனென்று சொல்லடா.. March 18, 2014

Posted by anubaviraja in அரசியல், கவிதை, தமிழ்.
Tags: , , , , ,
add a comment

குடிமகன்

குறிஞ்சியிலே வெடி வெடித்து மலைகளெல்லாம் மாயமாம்..

முல்லையிலே மரமறுத்து சிறு பறவையும் காணோமாம்..

மருதமெங்கும் எரிவாயுக்கு வயலெல்லாம் வேணுமாம்..

உயிரோடு கடலாடி போய்வரல்  நெய்தலெங்கும் தான் அரிதாம்..

காணி நிலம் கிடையாது  பாரதி .. இனி உன் நாடு பாலை நிலம் தான்..

மாண்புமிக்க தமிழினத்தில்..இப்போது வந்து பிறந்ததால்…

மதுபான மணம் தவிர வேறெதுவும் யாமறியோம் பராபரமே…

செவியற்றோர்க்கு வெடித்தாயோ?? September 6, 2012

Posted by anubaviraja in கவிதை, தமிழ், நடந்தவை.
Tags: , , , ,
9 comments

வறியோன் வெடிக்க எளியோன் சிதறினானோ ?

சோற்றுக்கு பிழைப்புக்கு தினம் அக்கினி பரிட்சை ஏனோ ?

ஏழையாய் பிறந்தது கொடும் பாவச் செயல் தானோ?

மாந்தர் மகிழ்வுற ஒர் கிராமம் மயானமானதோ ?

ஒளிச் சிதறல் வர உழைத்தவன் உடல் சிதறி மாண்டதேனோ ?

நீவிர் தீக்குளித்து ஊராருக்கு தீபவொளி விழாவோ?

பிணக்கிடங்குக்கு கொண்டு சென்றது நீ தினமுழைத்த வெடி கிடங்கா?

உதவிக்கு வந்த சனம் அவரோடு மண்டதென்ன ?

உரிமம் ரத்து செய்தார் கதவடைப்பேன் இல்லை?

பிணத்திற்கு பணம் ஏன் ?

வருமுன்னே காப்பதற்கு தடை என்ன?

கேள்விச்சரம் தொடுத்து அஞ்சலி செய்கிறேன்

சிவகாசிக்கு இனியொரு வெடி விபத்து வேண்டவே வேண்டாம்

இருளில் கிடைத்த வெளிச்சம் .. February 17, 2012

Posted by anubaviraja in கவிதை, தமிழ், நடந்தவை, மதுரை.
Tags: ,
2 comments

ராத்திரி ஒரு மணிக்கு கரண்ட் போச்சின்ன இப்படி கவிதை எழுதி உங்கள தான் இம்சை பண்ண தோணுது … வேற என்ன பண்றது ?? 😉
யாழிசை பாடும் சிறுசிறகாய்
நின் கானம் காதினில் ஒலித்திடவே…அறை நிறை ஒளி தரும் சிறு மெழுகாய் ..
மின்மினி போல் நீ மிளிர்ந்திடவே..

நெற்றியில் நிறைந்த வியர்வை துளி
ஆண்டு பல சென்று தரை விழவே…

இரைச்சல் சத்தம் இல்லாத
அமைதி மீண்டு எனை சேர்ந்திடவே…

ஆவன செய்த மின் வாரியமே
வாழிய வாழிய நின் மக்கட் பணியே…

பாரத சமுதாயம் வாழ்கவே!
ஜெய ஜெய (ஜெயா).. பாரத சமுதாயம் வாழ்கவே!

காதல் போயின்.. March 23, 2011

Posted by anubaviraja in கவிதை, தமிழ்.
Tags: , ,
6 comments

கண் நிறைய உன் புன்னகை, கணக்கு பாடத்தில் கோட்டை
அடுத்து பாத்துக்கலாம் டே”  உறுதி சொல்லும் மாமன்

தலையில் முட்டிய நிலை, “பார்த்து போ ராசா”  பதறும் பெரியம்மா

உன் நினைவில் உணவு விழுங்கி புரை ஏறி – “எய்யா பதறாம..” எனும் தாய்

உன்னை கேலி செய்தவனின் கை உடைத்து, கம்பிகளின் பின்னின்ற எனக்காய் கூனிக்குறுகி கையொப்பமிட்ட தந்தை

கோடை மழை இடியென தாக்கிய உன் கேள்வி
நானா? உன் குடும்பமா?

இவர்தமை விடுத்து உன்னை வந்து சேர்ந்து…
பிற வேடிக்கை மனிதரை போல் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

வாழ்க சனநாயகம்… January 11, 2010

Posted by anubaviraja in கவிதை, தமிழ்.
Tags: , ,
2 comments

எத்தனை கோபங்கள்.. எவ்வளவு ஆதங்கங்கள்..
குப்பை அள்ளாமல் சென்ற மாநகராட்சி உந்து மீது,
பகிரங்கமாய் லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர் மீது,
தினம் தலைப்புச் செய்தியில் வரும் ஊழல் மீது,
ஆனால் வாக்குப்பபதிவு தினத்தன்று மட்டும் சிறப்புத் திரைப்படமும், சுகமான உறக்கமும்..

வாழ்க சனநாயகம்…

கிபி 2109 – சென்னை மியுசியம்… August 23, 2009

Posted by anubaviraja in கவிதை, தமிழ்.
1 comment so far

இவ்வளவு அரிய திரவத்தை
தினமும் நூறு லிட்டர் உபயோகித்தார்களா…
மூளையற்ற முன்னோர்கள்- பேச்சு சத்தம் கேட்டது
கண்ணாடி பெட்டகத்தில் ஒரு பாட்டில் தண்ணீர்.

மறைந்தும் அணையாத மாட விளக்கே ….. July 7, 2009

Posted by anubaviraja in கவிதை, தமிழ்.
add a comment

ஆண் பிள்ளை அழக்கூடாது என்பாயே
பரீட்சைக்கு அழும் போது பாடம் சொல்லி தந்தாய்
பேய்க்கு அழும் பொழுது நெற்றியில் நீறிட்டு சென்றாய்
நானழுது தாங்காது நீஅழுவாய் – கதறும் எனை கண்டு
புன்னகையோடு புகை படமாய் நின்றாயே ???

மறைந்தும் அணையாத மாட விளக்கே …..

ஒளி மங்கிய எதிர்காலம் ….. July 5, 2009

Posted by anubaviraja in கவிதை, தமிழ்.
add a comment


ஆக்சிஜென் பாக்கெட் ஐந்நூறு ரூபாய்
தண்ணீர் பாட்டில் ஆயிரம் ரூபாய்
தலையை சிலுப்பி விழித்தெழுந்து
சிக்னலில் நிற்கும் வண்டியின் இஞ்சினை நிறுத்தினேன் ..

ஒளி மங்கிய எதிர்காலம் …..

விழலுக்கிறைத்த நீர்…… June 28, 2009

Posted by anubaviraja in கவிதை, தமிழ்.
add a comment

பேருந்து நிறுத்தத்தில் மாணவியை கேலி செய்யும் கேடிகள்
பார்த்து விட்டு கடந்து செல்பவனின் பர்சில் சிரிக்கிறாள்
உயிர் விட்டு அண்ணனுக்கு விழி தந்த தங்கை

விழலுக்கிறைத்த நீர்……