jump to navigation

Y This கொலவெறி #Kolaveri – ஒரு பின்நவீனத்துவ பார்வை November 25, 2011

Posted by anubaviraja in சினிமா, நகைச்சுவை, ரசித்தவை.
Tags: , , , , , , ,
5 comments

அன்பார்ந்த மக்களுக்கு … இப்போ எங்க பார்த்தாலும் ஒரே கொலைவெறி தாக்குதல் நடந்து கொண்டு இருக்கிறது என்பதை உளமார்ந்த கடுப்புடன் கூறிக்கொள்ள நான் கடமை பட்டுள்ளேன் ..

அது ஒன்னும் இல்லங்க .. நம்ம தலிவரோட பொண்ணு டைரக்ட் பண்ணி, அவரோட மருமகன் ஹீரோவா நடிக்க, ஒலக நாயகன் கமலோட கலை வாரிசு ஸ்ருதி ஹாசன் ஹீரோயினா நடிச்சி 3 அப்படிங்கற பேர்ல ஒரு படம் எடுத்துகிட்டு இருக்காங்க ..

அந்த படத்தோட ஒரு பாட்டு இன்டர்நெட்ல லீக் ஆயிருச்சி.. சரி மத்தவங்களா இருந்தா லபோதிபோன்னு புலம்பி எல்லா எடத்துலயும் காபிரைட் பிரச்சனைய கெளப்பி பாட்ட தூக்கிருப்பாங்க .. இவங்க கொஞ்சம் வித்யாசமா யோசிச்சி அதையே ஒரு வீடியோவா எடுத்து ஒரு சிங்கிள் ஆல்பமா ரிலீஸ் பண்ணி ஒரு பரபரப்ப உருவாக்கிட்டாங்க.. (ஒரு விளம்பரம் … 😉 ) இதோ அந்த வீடியோ … உங்களுக்காக

(more…)

Advertisements

இந்த டீ கடையில டீ கிடைக்காது.. November 19, 2011

Posted by anubaviraja in சென்னை, பிடித்தவை, ரசித்தவை.
2 comments

நம்ம தமிழ் மக்களோட கற்பனை சக்திக்கு ஒரு அளவே கடயாது இருந்தாலும் நம்ம மக்கள் இங்கிலீஷ் காரன் கண்டுபிடிச்சா மட்டும் அது அவங்களுக்கு ரொம்ப ஒசத்தி 😉

இந்த சிட்டி பசங்களும் பொண்ணுகளும் போடுற t Shirt ல என்னென்னவோ எழுதி இருக்கும் … சில வார்த்தைகள் எல்லாம் ஒன்னும் புரியாது 🙂

(more…)

ok ok – சந்தானம் திரும்ப புல் பார்ம்ல… November 17, 2011

Posted by anubaviraja in சினிமா, தமிழ், பிடித்தவை.
Tags: , , , , , , , ,
add a comment

கொஞ்சம் நாளா ஒரே சீரியஸ் படமா வந்து கிட்டு இருக்கு பாஸ் … அக்சன், அதிரடி, மறுஜென்மம், மரபணு, ஆப்கான் தீவிரவாதி 😉 … இப்படியே போய்கிட்டு இருந்தா எப்படி ??

அதான் நம்ம தலைவர் சந்தானம் … அதிரடி ரணகளமா … ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துல களம் இறங்கிட்டார் 🙂

ஏற்கனவே சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் இப்படி வெற்றி கூட்டணியோட களம் இறங்குரதால ஹாட்ரிக் அடிப்பங்கன்னு நம்பலாம் 🙂

ட்ரைலர் சூப்பர் …

அதுல பாருங்க சந்தானம் பேரு தான் முதல்ல வருது.. ஹீரோ உதயநிதி ஸ்டாலினாம் 😉

இந்த படம் எப்போ ரிலீஸ் ஆகுன்னு சொல்லுமாறு .. தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் 🙂 🙂

இதனால் பொது ஜனங்களுக்கு தெரிவிக்கிறது என்னன்னா…. November 16, 2011

Posted by anubaviraja in நடந்தவை.
4 comments

அன்பார்ந்த பெரியோர்களே… தாய்மார்களே… நண்பர்களே.. மற்றும் பொது ஜனங்களே .. எல்லாருக்கும் ஒரு நல்ல விஷயம் சொல்லிக்க ஆசைபடுறேன்.. இன்று முதல் … இந்த ப்ளாக்க்கு மூடு விழா… அதாவது இனிமே நான் இந்த ப்ளாக் ல எழுத போறது இல்ல… (யாருடா அங்க கை தட்டுறது… ) என்ன உங்க எல்லாருக்கும் ரொம்ப மகிழ்ச்சி போல தெரியுது…

அவ்ளோ சீக்கிரம் அதெல்லாம் நடக்க விட்ருவோமா என்ன ??? அதாவது .. இந்த எடத்துல எழுத மாட்டேன்னு தான சொன்னேன் … அட்ரெஸ் மாறி வேற இடத்துக்கு போயாச்சி…

இப்போ நான் எந்த எடத்துல கடை போட்டிருக்கேன் அப்படின்னா … டபிள்யு… .. டபிள்யு … டாட் … tmraja டாட் காம்… www.tmraja.com

கொஞ்சம் காசு செலவு பண்ணி இந்த பேருல வெப்சைட் விலைக்கு வாங்கி… ஏதோ இணைய உலகத்துல நாமளும் நடக்க ஆரம்பிச்சிட்டோம் 🙂

இருந்தாலும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு அப்படின்னு கேப்டன் பிரபாகரன் படத்துல நம்ம கேப்டன் சொன்ன மாதிரி … நீங்க என்ன சொல்றிங்க அப்படிங்கறத பொறுத்து தான் என்னோட அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் – சொல்லிட்டேன் ஆமா !!!! 😉

நீங்க எல்லாரும் என்ன நினைக்ரிங்க அப்படின்னு கீழ இருக்குற டப்பால சொல்லிட்டு போய்டிங்க அப்படின்னா வசதியா இருக்கும் 🙂 நான் இங்கயே இருக்குறதா – இல்லாட்டி கடைய காலி பண்ணிட்டு ஊர பாக்க போயட்றதா அப்படின்னு 🙂 🙂

%d bloggers like this: