jump to navigation

ஐஸ் பக்கெட் சேலஞ்.. அப்படின்னா என்னன்னா August 31, 2014

Posted by anubaviraja in நடந்தவை, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , , , , , , ,
add a comment

என்னடா ஊருக்குள்ள எல்லாரும் ஐஸ் பக்கெட் சேலஞ்….ஐஸ் பக்கெட் சேலஞ்… அப்டிங்ரான்களே.. அதோட எஸ்டிடி (வரலாறு) தெரிஞ்சிக்கணும் ணா..

Amyotrophic lateral sclerosis அப்படின்னு ஒரு நோய்.. அதோட விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டுவதற்கு ஐஸ் பக்கெட் சேலஞ் அப்படின்னு ஒண்ணு கண்டு பிடிச்சி.. இந்த Facebook, Twitter மாதிரியான சமூக வலைதளங்களில் #ALS அப்படிங்கற டாக்ல பரப்ப ஆரம்பிச்சாங்க.. அதாகப்பட்டது சவால் விடுறவர் ஒருத்தர் .. அத ஓபனா யாரவது ஒருத்தருக்கு அனுப்பி வச்சிர வேண்டியது.. ஒண்ணு சவால ஏத்துகிட்டு ஒரு பக்கெட் நெறைய ஐஸ் கட்டி தண்ணி வச்சி தலைல ஊத்தணும்.. இல்லேன்னா அந்த தொண்டு நிறுவனத்துக்கு டொனேஷன் கொடுத்துரணும்..

 

ஜூன் மாச கடைசில ஆரம்பிச்ச இந்த சவால், காட்டு தீ மாதிரி பரவ ஆரம்பிசிச்சி.. ஜார்ஜ்புஷ், கிளிண்டன், காமரூன், இது போன்ற உலக தலைவர்கள் எல்லாம் சவால் ஏத்துகிட்டாங்க, ஒபாமா ஜகா வாங்கிட்டு நூறு டாலர் டொனேட் பண்ணிட்டார் 😉 இருந்தாலும் ஐஸ் பக்கெட் குளிரும்மா இல்லையா ?

(more…)

21-12-12 உலகம் ஏன் அழியவில்லை என்றால்…. December 21, 2012

Posted by anubaviraja in அரசியல், எதுலயும் சேராது, சினிமா, சென்னை, தமிழ், தலை, நடந்தவை, பிடித்தவை, புத்தகம், மதுரை, ரசித்தவை.
Tags: , , , , , , , , , , , , , ,
4 comments

100_post

உலகம் அழியிர விஷயம் ஒரு ஓரமா கெடக்கட்டும்… இப்போ நான் சொல்ல வர்ற முக்கியமான விஷயம் என்னன்னா …இது என்னோட நூறாவது பதிவு…. அட ஆமாங்க … நானும் செஞ்சுரி அடிச்சிட்டேன் ! 🙂 🙂 🙂 2008 டிசம்பர் மாசம் .. கிட்டத்தட்ட நாலு வருஷம் முன்னாடி விளையாட்டு போக்கில எழுத ஆரம்பிச்ச ஒரு விஷயம்… இப்போ நூறு பதிவு அப்படிங்கறது… எனக்கே கொஞ்சம் வியப்பா தான் இருக்கு … இத விட அதிகமா நான் எழுதிருக்க முடியும்… எல்லாம் இந்த வேலை பளு, மின்சாரமின்மை, சோம்பல், இப்படி பல்வேறு காரணங்களால் ஏதோ.. இப்போ தான் முட்டி மோதி ஒரு நூறு பதிவுக்கு வந்திருக்கேன்..

என்னோட பெரும்பாலான பதிவுகள் நகைச்சுவை பதிவுகளா தான் இருக்கும்… ஏன்னா பேசிக்கல்லி நாம காமெடி லைக் பண்றதால கூட இருக்கலாம் … நம்ம பதிவுகள்ள ரொம்பஅதிகமா ஹிட் அடிச்சது.. நம்ம தலைவர் பவர் ஸ்டார் தான்… அந்த டாப் பத்து பதிவுகள்…இதோ உங்கள் பார்வைக்கு …

 

(more…)

சென்னை: IPL – நாடகம் விடும் நேரம் தான் உச்ச காட்சி நடக்குதம்மா! May 21, 2012

Posted by anubaviraja in அரசியல், கிரிக்கெட், சென்னை, நகைச்சுவை, நடந்தவை, ரசித்தவை.
Tags: , , , , , , , , , ,
11 comments

இந்த IPL – சீசன் 5 ஒரு வழியா அடுத்த கட்டத்துக்கு வந்துருச்சி… எல்லாரும் சென்னை இந்த தடவை கப் வாங்குமா ? அப்படின்னு கேட்டு கிட்டு இருந்த போது… நாங்க Playoff க்கே போக மாட்டோம் மக்கா.. அப்படின்னு சரமாரியா எல்லா டீம் கூடவும் தோத்து… பாயிண்ட்ஸ் டேபிள்ல திரிசங்கு நிலைமையில தொங்கிக்கிட்டு இருந்தது சென்னை டீம் …

இந்த IPL க்கு கதை திரைக்கதை, வசனம், கிளைமாக்ஸ் எல்லாம் ரொம்ப பரபரப்பா எழுதிருக்காங்க… 🙂 எல்லா மேட்ச்சும் , கடைசி ஓவர்… கடைசி பந்து வரைக்கும் வந்து தான் முடிஞ்சுது… யாரெல்லாம் அடுத்த ரௌண்ட்க்கு போவா அப்படின்னு கடைசி வரைக்கும் குழப்பம் … கடைசில நாலு மெட்ரோ போலிட்டன் சிட்டியும்  Playoff க்கு வந்தது… இப்படி எல்லாமே முன்கூட்டியே முடிவு செஞ்சி வச்சா மாதிரியே நடந்தது… ஒருவழியா கைப்புள்ள 😉 டெக்கான் ரெண்டு மேட்ச் ஜெயிச்சி சென்னைக்கு அடுத்த ரவுண்டு வாய்ப்பு வாங்கி குடுத்தாங்க …

(more…)

சென்னை அனுபவங்கள் பார்ட்-2 April 30, 2012

Posted by anubaviraja in சென்னை, நடந்தவை, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , , , , , , , , , , ,
add a comment

ஒரு தொடர் பதிவு அப்படின்னு சொல்லிட்டு மூணு வருஷம் கழிச்சி ரெண்டாவது பாகம் போடுற மோத ஆள் நானா தான் இருக்கும்.. சென்ற பதிவுக்கு வாசக கண்மணிகள் மத்தியில் போதுமான வரவேற்ப்பு இல்லாத படியால் இந்த பதிவு இங்கு தாமதமாக பதிப்பிக்க படுகின்றது என்பதை மிக்க வருத்தத்தோடு தெரிவித்து கொள்ளுகிறோம்… (ஷப்பா… எவ்ளோ பெரிய வாக்கியம்!!! 😉 )

போன முறை , முறையே மெரினா பீச் , ஸ்பென்செர் பிளாசா, சிட்டி சென்டெர், பெசன்ட் நகர் பீச் , ஆகிய இடங்களுக்கு சென்ற அனுபவத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் … இப்போ நான் சென்ற மற்றும் சில இடங்கள் உங்கள் பார்வைக்கு (இந்த வழக்குல பேசுறது எவ்ளோ கஷ்டமா இருக்கு 😉 )

பாரிஸ் கார்னர் DVD கடைகள்:

(more…)

Little Rascals – குட்டி களவாணிகள் April 25, 2012

Posted by anubaviraja in சினிமா, நகைச்சுவை, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , ,
2 comments

எல்லாருக்கும் வணக்கம்.. ரொம்ப நாள் கழிச்சி இப்போ இந்த ப்ளாக் போஸ்ட் மூலமா உங்கள இம்சை பண்றதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி ;).. ஏதோ அழகர் புண்ணியத்துல இன்னிக்கு மதுரைல கரண்ட் போகம இருக்குறதுனால இத எழுத முடிஞ்சது … தமிழ் நாடு மின்சார வாரியத்துக்கு இந்த பதிவை சமர்ப்பணம் செய்கிறேன் 😉

இந்த ராஸ்கோலு  அப்படிங்கற வார்த்தை வேலைக்காரன் படத்துல VK ராமசாமி பிரபல படுதுனது 😉 இந்த Little Rascals படத்தோட DVD கெடைச்சதும் ஏதோ கொழந்த பசங்க படம் போல அப்படின்னு நெனைச்சி கிட்டு தான் பார்க்க ஆரம்பிச்சேன்.. ஆனா இது வேற வேற வேற மாதிரி படம் 😉 அப்படின்னு தெரிஞ்சிகிட்டேன்…

இந்த படம் ஒரு காதல் காவியம்… 😉 சின்ன குழந்தைகளோட உலகத்த அவங்க கூடவே இருந்து காட்சி படுத்தின மாதிரியான ஒரு கதை அமைப்பு … படத்துல வர்ற எல்லா கதாபாத்திரங்களும் (நியாயமா பார்த்தா கதா பசங்க அப்படின்னு தான் சொல்லணும் 🙂 ) கலக்கலா நடிச்சிருப்பாங்க…

(more…)

பவர் ஸ்டார் – ஒரு வாழ்க்கை குறிப்பு மற்றும் ஆனந்த தொல்லை December 27, 2011

Posted by anubaviraja in தலை, நகைச்சுவை, மதுரை, ரசித்தவை.
Tags: , , , , , , , ,
7 comments

நம்ம பவர் ஸ்டார் இருக்கார் இல்லையா?? .. என்னது ?? அவர உங்களுக்கு தெரியாதா?? அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீங்க??

நித்தியா மேனனுக்கே மிரட்டல் விட்டவரு அய்யா நம்ம பவர் ஸ்டாரு … (நல்லா படிக்கணும் பாஸ் !! நித்யா மேனன் .. நித்யானந்தா கெடயாது 😉 )

அவரை பத்தி ட்விட்டர்ல பேசுறாங்க.. Facebookல பேசுறாங்க.. ஒவ்வொரு நாளும் டிவில பெட்டி எடுக்குறாங்க .. ஆளே வராத லத்திகா படத்த 250 நாள் கடந்து வெற்றிகரமா ஓட வச்சிகிட்டு இருக்குறவர் தான்யா எங்க பவர் ஸ்டார் தேங்கா சீனிவாசன் … ச்சே ச்சே .. டங் ஸ்லிப் ஆயிருச்சி … டாக்டரு சீனிவாசன் ….

(more…)

ட்விட்டரில் ஒரு ராமாயணம் December 26, 2011

Posted by anubaviraja in நகைச்சுவை, ரசித்தவை.
Tags: , , , , , , ,
1 comment so far

வர வர இந்த ட்விட்டர்ல இருக்குறவங்க அலும்பு தாங்க முடியல …. ஏதேதுக்கோ Hash Tag வச்சி… இப்போ 140 கேரக்டர்ல  ராமாயணம் கதை சொல்.. அப்படின்னு #140inramayan அப்படின்னு ஒன்ன ஓட்டி… ஷப்பா… இருந்தாலும் நெறைய ரசிக்க கூடிய Tweets இருக்க தான் செஞ்சது .. கொஞ்சத்த இங்க நம்ம பார்க்கலாம்

(more…)

FlashMob – பப்ளிக் பிளேஸ்ல பெர்பாமான்ஸ் பண்றது December 21, 2011

Posted by anubaviraja in சென்னை, செய்திகள், நடந்தவை, ரசித்தவை.
Tags: , , , , ,
add a comment

கொலவெறி வெற்றிக்கு அப்புறமா இப்போ YouTube தான் ரொம்ப பாப்புலரா ஓடிகிட்டு இருக்கு..  கொஞ்ச நாளா trending topic ல FlashMob, FlashMob… அப்படின்னு ஒன்னு ஓடிகிட்டு இருக்கு… எல்லாம் நமக்கு Facebook மூலமா கெடைக்கிற அப்டேட் தான்..

நான் கூட FlashMob அப்படின்னா Flashல செஞ்ச அனிமேஷன் அப்படின்னு நெனைச்சிக்கிட்டு இருந்தேன்… அப்புறம் தான் அதுக்கு அர்த்தம் பப்ளிக் பிளேஸ்ல பெர்பாமான்ஸ் பண்றது அப்படின்னு நம்ம Wikipedia அண்ணாத்த சொன்னாரு . உலகத்துல பல இடங்கள்ல நடந்துகிட்டு இருக்குற FlashMob இப்போ நம்ம நாட்டுலயும் வந்துறிச்சாம் பாசு… FlashMob அப்படிங்கறது பப்ளிசிட்டி, விளம்பரம் இது போன்ற விசயங்களுக்காக செய்றது..

 

(more…)

Y This கொலவெறி #Kolaveri – ஒரு பின்நவீனத்துவ பார்வை November 25, 2011

Posted by anubaviraja in சினிமா, நகைச்சுவை, ரசித்தவை.
Tags: , , , , , , ,
5 comments

அன்பார்ந்த மக்களுக்கு … இப்போ எங்க பார்த்தாலும் ஒரே கொலைவெறி தாக்குதல் நடந்து கொண்டு இருக்கிறது என்பதை உளமார்ந்த கடுப்புடன் கூறிக்கொள்ள நான் கடமை பட்டுள்ளேன் ..

அது ஒன்னும் இல்லங்க .. நம்ம தலிவரோட பொண்ணு டைரக்ட் பண்ணி, அவரோட மருமகன் ஹீரோவா நடிக்க, ஒலக நாயகன் கமலோட கலை வாரிசு ஸ்ருதி ஹாசன் ஹீரோயினா நடிச்சி 3 அப்படிங்கற பேர்ல ஒரு படம் எடுத்துகிட்டு இருக்காங்க ..

அந்த படத்தோட ஒரு பாட்டு இன்டர்நெட்ல லீக் ஆயிருச்சி.. சரி மத்தவங்களா இருந்தா லபோதிபோன்னு புலம்பி எல்லா எடத்துலயும் காபிரைட் பிரச்சனைய கெளப்பி பாட்ட தூக்கிருப்பாங்க .. இவங்க கொஞ்சம் வித்யாசமா யோசிச்சி அதையே ஒரு வீடியோவா எடுத்து ஒரு சிங்கிள் ஆல்பமா ரிலீஸ் பண்ணி ஒரு பரபரப்ப உருவாக்கிட்டாங்க.. (ஒரு விளம்பரம் … 😉 ) இதோ அந்த வீடியோ … உங்களுக்காக

(more…)

இந்த டீ கடையில டீ கிடைக்காது.. November 19, 2011

Posted by anubaviraja in சென்னை, பிடித்தவை, ரசித்தவை.
2 comments

நம்ம தமிழ் மக்களோட கற்பனை சக்திக்கு ஒரு அளவே கடயாது இருந்தாலும் நம்ம மக்கள் இங்கிலீஷ் காரன் கண்டுபிடிச்சா மட்டும் அது அவங்களுக்கு ரொம்ப ஒசத்தி 😉

இந்த சிட்டி பசங்களும் பொண்ணுகளும் போடுற t Shirt ல என்னென்னவோ எழுதி இருக்கும் … சில வார்த்தைகள் எல்லாம் ஒன்னும் புரியாது 🙂

(more…)