jump to navigation

2012 கிட்ட நாம எதிர்பார்க்குறது என்னன்னா…. December 31, 2011

Posted by anubaviraja in நடந்தவை, பிடித்தவை.
add a comment

அப்புறம் மக்கா … நாளைக்கு புத்தாண்டு 2012 பிறக்க போது .. நம்ம இந்த வருசத்துகிட்ட இருந்து எதிர் பார்க்குறது என்னா அப்படின்னா …

  • இந்த தானே புயல் மாதிரி திடீர் திடிர்ன்னு வராம கரெக்டா பருவ காலத்துல மழை..
  • வெய்யில் காலத்துல நல்லா சுரிர்ன்னு உரைக்கிற மாதிரி வெய்யில்..
  • கட்டே ஆகாத கரண்ட்
  • அணு உலை தேவைப்படாத மாற்று எரிசக்தி
  • நதிகளை இணைக்கிறத பத்தி குறைந்த பட்சம் பேச்சு வார்த்தை
  • டாம் 999 க்கு ஒரு தீர்வு
  • இதுக்கு மேலயும் கூடாத பெட்ரோல் விலை 😦
  • கொலவெறி மாதிரி இன்னும் நெறைய கருத்தாழம் மிக்க பாடல்கள் 😉
  • கொஞ்சமாவது பலம் வாய்ந்த லோக்பால் மசோதா
  • கொஞ்சமாவது செயல்படுற பிரதமர்
  • கூடிய சீக்கிரம் சச்சினுக்கு நூறாவது செஞ்சுரி (அவரை பார்த்தா உங்களுக்கு பாவமா இல்ல ? 😦  )
  • திகார் ஜெயில் முழுசும் நம்ம அருமை ஊழல்வாதிகள்
  • தயவுசெஞ்சி சென்னைக்கு மெட்ரோ மற்றும் மோனோ ரயில்கள்
  • மூணு மாசத்துக்கு ஒரு பவர் ஸ்டார் படம்
  • வருசத்துக்கு ஒரு தலைவர் டி. ஆர் படம்! (அதுக்கு மேல நாடு தாங்காது பாஸ் 😉 )

இது மாதிரி நல்ல விஷயங்கள் எல்லாம் நடந்தா சரி…

உங்க எல்லாதுக்கும் என்னோட இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .. மறுபடியும் அடுத்த வருஷம் சந்திப்போம் 😉 வர்ட்டா …

பவர் ஸ்டார் – ஒரு வாழ்க்கை குறிப்பு மற்றும் ஆனந்த தொல்லை December 27, 2011

Posted by anubaviraja in தலை, நகைச்சுவை, மதுரை, ரசித்தவை.
Tags: , , , , , , , ,
7 comments

நம்ம பவர் ஸ்டார் இருக்கார் இல்லையா?? .. என்னது ?? அவர உங்களுக்கு தெரியாதா?? அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீங்க??

நித்தியா மேனனுக்கே மிரட்டல் விட்டவரு அய்யா நம்ம பவர் ஸ்டாரு … (நல்லா படிக்கணும் பாஸ் !! நித்யா மேனன் .. நித்யானந்தா கெடயாது 😉 )

அவரை பத்தி ட்விட்டர்ல பேசுறாங்க.. Facebookல பேசுறாங்க.. ஒவ்வொரு நாளும் டிவில பெட்டி எடுக்குறாங்க .. ஆளே வராத லத்திகா படத்த 250 நாள் கடந்து வெற்றிகரமா ஓட வச்சிகிட்டு இருக்குறவர் தான்யா எங்க பவர் ஸ்டார் தேங்கா சீனிவாசன் … ச்சே ச்சே .. டங் ஸ்லிப் ஆயிருச்சி … டாக்டரு சீனிவாசன் ….

(more…)

ட்விட்டரில் ஒரு ராமாயணம் December 26, 2011

Posted by anubaviraja in நகைச்சுவை, ரசித்தவை.
Tags: , , , , , , ,
1 comment so far

வர வர இந்த ட்விட்டர்ல இருக்குறவங்க அலும்பு தாங்க முடியல …. ஏதேதுக்கோ Hash Tag வச்சி… இப்போ 140 கேரக்டர்ல  ராமாயணம் கதை சொல்.. அப்படின்னு #140inramayan அப்படின்னு ஒன்ன ஓட்டி… ஷப்பா… இருந்தாலும் நெறைய ரசிக்க கூடிய Tweets இருக்க தான் செஞ்சது .. கொஞ்சத்த இங்க நம்ம பார்க்கலாம்

(more…)

FlashMob – பப்ளிக் பிளேஸ்ல பெர்பாமான்ஸ் பண்றது December 21, 2011

Posted by anubaviraja in சென்னை, செய்திகள், நடந்தவை, ரசித்தவை.
Tags: , , , , ,
add a comment

கொலவெறி வெற்றிக்கு அப்புறமா இப்போ YouTube தான் ரொம்ப பாப்புலரா ஓடிகிட்டு இருக்கு..  கொஞ்ச நாளா trending topic ல FlashMob, FlashMob… அப்படின்னு ஒன்னு ஓடிகிட்டு இருக்கு… எல்லாம் நமக்கு Facebook மூலமா கெடைக்கிற அப்டேட் தான்..

நான் கூட FlashMob அப்படின்னா Flashல செஞ்ச அனிமேஷன் அப்படின்னு நெனைச்சிக்கிட்டு இருந்தேன்… அப்புறம் தான் அதுக்கு அர்த்தம் பப்ளிக் பிளேஸ்ல பெர்பாமான்ஸ் பண்றது அப்படின்னு நம்ம Wikipedia அண்ணாத்த சொன்னாரு . உலகத்துல பல இடங்கள்ல நடந்துகிட்டு இருக்குற FlashMob இப்போ நம்ம நாட்டுலயும் வந்துறிச்சாம் பாசு… FlashMob அப்படிங்கறது பப்ளிசிட்டி, விளம்பரம் இது போன்ற விசயங்களுக்காக செய்றது..

 

(more…)