jump to navigation

குவாட்டர் கட்டிங் .. ட்ரைலர் – இன்னொரு தமிழ் படம் ???? August 22, 2010

Posted by anubaviraja in சினிமா, தமிழ், நகைச்சுவை, ரசித்தவை.
Tags: , , , , , ,
8 comments

வணக்கம்ங்கோ… இது என்ன ட்ரைலர் சீசன் போல தெரியுது … நம்ம டேஸ்டுக்கு நெறைய படம் ரிலீஸ் ஆக போகுது  பாஸ் ….

தமிழ் படத்துல சென்ட்சுரி அடிச்ச கையோட சிவா “குவாட்டர் கட்டிங்” படத்துல களம் எரங்கிருக்கார்.. என்ன பண்ணுறார்ன்னு பார்க்கலாம்…

அவரோட பாடி லாங்குவேஜ் .. டயலாக் டெலிவரி இதெல்லாம் அடிச்சிக்க ஆளே கெடயாது .. இந்த படத்துல SPB சரண் கூட்டணி அமைசிருக்கார் ..  ட்ரைலர் தான் பாருங்களேன்.

அடடே ஆச்சிரியம் … SS Music Craig நடிச்சிருக்காரா ??? 🙂

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் .. எனக்கு என்னமோ படம் ஒரு மாஸ் ஹிட்டு ஆகும்ன்னு தோணலை .. நெறைய ஓரம்போ படாது சாயல் அடிக்கிது … கண்டிப்பா ரசிக்க வைக்கும் ஆனா ஒடுமான்னு தெரியலை …

பஞ்ச் :  சுந்தர் ராஜன்  (சிவா தான்) தன்னோட பேர சுறான்னு சுருக்கி வச்சி கிட்டேன்ன்னு சொல்லுறார் பா .. ஹ்ம்ம் .. விஜய் ரொம்ப பாவம் 😉 😉

பாஸ் என்கிற பாஸ்கரன் – சந்தானம் அண்ட் கோ கலக்குறாங்க August 18, 2010

Posted by anubaviraja in சினிமா, நகைச்சுவை, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , , , , , , ,
15 comments

எல்லாருக்கும் வணக்கம்… எனக்கு SMS படம் எவ்வளவு பிடிச்சிருந்ததுன்னு முன்னாடியே சொல்லிருக்கேன் . இப்போ அதே டீம் கலக்கலா வந்துருக்காங்க .. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துக்காக . ட்ரைலர் வந்துரிசி, படத்த கண்டிப்பா பார்த்தே ஆகணும்ன்னு முடிவு எடுத்தாச்சு 🙂 🙂

நீங்களே பாருங்களேன் …

ஆர்யாவும் சந்தானமும் பின்னி பெடல் எடுக்குறாங்க … ஆரம்பதுலையே ஆக்சன் படங்களை எல்லாம் நல்லா வாரிட்டு இவங்க பண்ணுற அட்டகாசம் சூப்பர்.

சந்தானம் வழக்கம் போல “நீ என்ன டோக்கொமா கம்பெனி ஓனரா ” அப்படின்னு ஆரம்பிச்சி பல வகையில கலாய்சிருக்கார்

படம் வர்ற வரைக்கும் வெய்ட் பண்ண வேண்டியது தான 😀 😀

நம்பேன் டா ……… நம்பேன் டா ………நம்பேன் டா ……… 🙂 🙂