jump to navigation

தெனாலி ராமன் – ட்ரெய்லர்: கைப்புள்ள Comeback! March 29, 2014

Posted by anubaviraja in அரசியல், சினிமா, தலை, நகைச்சுவை, பிடித்தவை.
Tags: , , , ,
3 comments

2011 எலெக்சன்ல தெரியாத்தனமா வாய்ஸ் குடுக்க போய் … நம்ம தலைய ஒரு மூணு வருஷம் வீட்ல சும்மா உட்கார வச்சிட்டாங்க.

 

ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை மாதிரி.. யாராரோ காமடி பண்ண முயற்சி பண்றாங்க, அதுல பாருங்க நமக்கு சிரிப்பே வர மாட்டேங்குது.. சந்தானம் இப்போ கொஞ்சம் போர் அடிக்க ஆரம்பிச்சிட்டார் ..  மிக்க ஆவலோட எதிர் பார்த்த ட்ரெய்லர் வந்துரிச்சி..

 

பன்ச் டயலாக் என்னனா …

 

ஒருவன் லட்சியம் நிறைவாகும் வரையிலும் மறைவாக இருப்பது தான் நல்லது.. இது உலகின் அனைத்து போராளிகளுக்கும் பொருந்தும் மன்னா 🙂

 

 

தெனாலிராமா உனது வருகையை கோலாகலமாகக் கொண்டாட வேண்டும்!

 

(கொஞ்சம் இந்திரலோகத்தில் அழகப்பன் வாடை அடிக்கிதோ? 😦  … இருக்காதுன்னு நம்புவோம்!)

தமிழனென்று சொல்லடா.. March 18, 2014

Posted by anubaviraja in அரசியல், கவிதை, தமிழ்.
Tags: , , , , ,
add a comment

குடிமகன்

குறிஞ்சியிலே வெடி வெடித்து மலைகளெல்லாம் மாயமாம்..

முல்லையிலே மரமறுத்து சிறு பறவையும் காணோமாம்..

மருதமெங்கும் எரிவாயுக்கு வயலெல்லாம் வேணுமாம்..

உயிரோடு கடலாடி போய்வரல்  நெய்தலெங்கும் தான் அரிதாம்..

காணி நிலம் கிடையாது  பாரதி .. இனி உன் நாடு பாலை நிலம் தான்..

மாண்புமிக்க தமிழினத்தில்..இப்போது வந்து பிறந்ததால்…

மதுபான மணம் தவிர வேறெதுவும் யாமறியோம் பராபரமே…

21-12-12 உலகம் ஏன் அழியவில்லை என்றால்…. December 21, 2012

Posted by anubaviraja in அரசியல், எதுலயும் சேராது, சினிமா, சென்னை, தமிழ், தலை, நடந்தவை, பிடித்தவை, புத்தகம், மதுரை, ரசித்தவை.
Tags: , , , , , , , , , , , , , ,
4 comments

100_post

உலகம் அழியிர விஷயம் ஒரு ஓரமா கெடக்கட்டும்… இப்போ நான் சொல்ல வர்ற முக்கியமான விஷயம் என்னன்னா …இது என்னோட நூறாவது பதிவு…. அட ஆமாங்க … நானும் செஞ்சுரி அடிச்சிட்டேன் ! 🙂 🙂 🙂 2008 டிசம்பர் மாசம் .. கிட்டத்தட்ட நாலு வருஷம் முன்னாடி விளையாட்டு போக்கில எழுத ஆரம்பிச்ச ஒரு விஷயம்… இப்போ நூறு பதிவு அப்படிங்கறது… எனக்கே கொஞ்சம் வியப்பா தான் இருக்கு … இத விட அதிகமா நான் எழுதிருக்க முடியும்… எல்லாம் இந்த வேலை பளு, மின்சாரமின்மை, சோம்பல், இப்படி பல்வேறு காரணங்களால் ஏதோ.. இப்போ தான் முட்டி மோதி ஒரு நூறு பதிவுக்கு வந்திருக்கேன்..

என்னோட பெரும்பாலான பதிவுகள் நகைச்சுவை பதிவுகளா தான் இருக்கும்… ஏன்னா பேசிக்கல்லி நாம காமெடி லைக் பண்றதால கூட இருக்கலாம் … நம்ம பதிவுகள்ள ரொம்பஅதிகமா ஹிட் அடிச்சது.. நம்ம தலைவர் பவர் ஸ்டார் தான்… அந்த டாப் பத்து பதிவுகள்…இதோ உங்கள் பார்வைக்கு …

 

(more…)

மின்சாரம் இல்லா தமிழ்நாடு – அப்போ சென்னை ?? October 23, 2012

Posted by anubaviraja in அரசியல், சென்னை, செய்திகள், தமிழ், நடந்தவை, மதுரை.
Tags: , , , , ,
2 comments

அனைவருக்கும் வணக்கம் … ரொம்ப நாளா நான் பதிவு எழுதாமலேயே இருந்ததுக்கு மிக முக்கியமான காரணம், தமிழ் நாட்டுல மின் தட்டுப்பாடு தலை விரிச்சி ஆடுறதாலும், அதுக்கு தலை வாரி, பூச்சூடி பார்க்க தமிழக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காததும் தான் அப்படிங்கறத இங்கு பதிவு செய்ய கடமை பட்டிருக்கிறேன் 😉

இப்படி தான் ஒவ்வொருத்தரோட பொழுதும் தினம் தினம் போகுது

சென்னைய தவிர்த்த தமிழ்நாட்டோட பிற பகுதிகள் எல்லாத்துலயும் 14-16 மணி நேரம் மின்சாரம் கிடையாது… இதனால வர சில பல பிரச்சனைகள் என்னென்னன்னு பார்க்கலாம்

(more…)

சென்னை: IPL – நாடகம் விடும் நேரம் தான் உச்ச காட்சி நடக்குதம்மா! May 21, 2012

Posted by anubaviraja in அரசியல், கிரிக்கெட், சென்னை, நகைச்சுவை, நடந்தவை, ரசித்தவை.
Tags: , , , , , , , , , ,
11 comments

இந்த IPL – சீசன் 5 ஒரு வழியா அடுத்த கட்டத்துக்கு வந்துருச்சி… எல்லாரும் சென்னை இந்த தடவை கப் வாங்குமா ? அப்படின்னு கேட்டு கிட்டு இருந்த போது… நாங்க Playoff க்கே போக மாட்டோம் மக்கா.. அப்படின்னு சரமாரியா எல்லா டீம் கூடவும் தோத்து… பாயிண்ட்ஸ் டேபிள்ல திரிசங்கு நிலைமையில தொங்கிக்கிட்டு இருந்தது சென்னை டீம் …

இந்த IPL க்கு கதை திரைக்கதை, வசனம், கிளைமாக்ஸ் எல்லாம் ரொம்ப பரபரப்பா எழுதிருக்காங்க… 🙂 எல்லா மேட்ச்சும் , கடைசி ஓவர்… கடைசி பந்து வரைக்கும் வந்து தான் முடிஞ்சுது… யாரெல்லாம் அடுத்த ரௌண்ட்க்கு போவா அப்படின்னு கடைசி வரைக்கும் குழப்பம் … கடைசில நாலு மெட்ரோ போலிட்டன் சிட்டியும்  Playoff க்கு வந்தது… இப்படி எல்லாமே முன்கூட்டியே முடிவு செஞ்சி வச்சா மாதிரியே நடந்தது… ஒருவழியா கைப்புள்ள 😉 டெக்கான் ரெண்டு மேட்ச் ஜெயிச்சி சென்னைக்கு அடுத்த ரவுண்டு வாய்ப்பு வாங்கி குடுத்தாங்க …

(more…)

தமிழ் நாடே பத்தி எரியும் .. தலைவர் போஸ்டர் மேல கை வச்சிட்டிங்கல்ல?? August 1, 2011

Posted by anubaviraja in அரசியல், செய்திகள், தலை, நகைச்சுவை, நடந்தவை, மதுரை.
Tags: , , , ,
8 comments

இது வரைக்கும் எந்த ஒரு கட்சியும் செய்யாத ஒரு காரியம் … பெட்ரோல், டீசல், விலை உயர்வ கண்டிச்சி போராட்டம் அறிவிச்ச ஒரே கட்சி … அது நம்ம லதிமுக தான் ….

(more…)

எலக்சன் முடிவும் கைப்புள்ள கதியும்… May 13, 2011

Posted by anubaviraja in அரசியல், சினிமா, தலை, நடந்தவை, ரசித்தவை.
Tags: , , , , , , ,
11 comments

எலக்சன் ரிசல்ட் ஒரு வழியா முடிஞ்சி அம்மாவோட பசுமை அலை எங்கயும் வீச ஆரம்பிசிரிச்சி … தாத்தாவுக்கு டாட்டான்னு ட்விட்டர் ல HashTag எப்போ ஆரம்பிச்சாங்களோ அப்போவே முடிவு இப்படி தான் இருக்கும்ன்னு  நெனச்சேன் …

(more…)

2016 ல நம்ம ஆட்சி தான் May 12, 2011

Posted by anubaviraja in அரசியல், செய்திகள், தலை, நடந்தவை.
Tags: , , , , , , ,
9 comments

எனக்கு வெவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து தமிழ் நாட்டுல ரெண்டு கட்சி ஆட்சி தான் நடந்துகிட்டு இருக்கு – இப்ப மட்டும் உனக்கு ரொம்ப விவரம் தெரியுமான்னு கேட்க படாது …

அதாகப்பட்டது இந்த தேர்தல மிக பெரிய ஒரு மக்கள் இயக்கம் ஒண்ணு புறக்கணிச்சிரிச்சி அப்படின்னு சமுக ஆர்வலர்கள் யாருமே பொங்கி எழல அப்படிங்கறது தான் என்னோட ஒரே மன குமுறல் 😦 (அய்யயோ நான் அந்த கருப்பு துண்டுகாரற சொல்லைங்கோ )

(more…)

ஸ்பெக்ட்ரம் – முடிவு தான் என்ன? May 4, 2011

Posted by anubaviraja in அரசியல், ரசித்தவை.
Tags: , , , , ,
2 comments

எல்லாருக்கும் வணக்கம், திரும்பவும் வந்தாச்சி 🙂

இப்போ நம்ம ராக்கெட் ராஜா விஜய் டிவி ல ஓடுறார் … கேபிள் ராஜா வானத்துல ஓடுறார் …. ஸ்பெக்ட்ரம் ராசா திஹார்ல இருக்கார் ஆனா ஸ்பெக்ட்ரம் கேஸ் என்ன பா ஆகும்??

நம்ம தினமலர்ல ஒரு கார்ட்டூன் போட்ருக்காங்க … இப்படி தான் இந்த நாடாளுமன்ற கூட்டு குழு முடிவு இருக்கும் போல 😦

நெக்ஸ்ட் மீட் பண்ணலாமா  ??