jump to navigation

கோ கொரோனா கோ.. July 30, 2020

Posted by anubaviraja in Uncategorized.
add a comment

அதாகப்பட்டது கிபி 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து கிளம்பிய ஒரு கிருமி சூறாவளி உலகம் சுற்றும் வாலிபனாகி… ஆறே மாதத்தில் பலரின் வாழ்க்கையை புரட்டி போட்டது தங்கள் அறிவீர்கள்.

ஒரு கட்டத்தில் சீனா முதல் இடத்தில் இருந்தது, (வேறென்ன பாதிக்கப்பட்ட மற்றும் இறப்பு விகிதத்தில் தான்) பிறகு அந்த பந்தயம் தென் கொரியா கையில் இருந்து இரான் பக்கம் சென்று .. இத்தாலி பக்கம் ருத்ர தாண்டவம் ஆடி.. உலக வல்லரசு அமெரிக்கா பக்கம் சென்று வென்று லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்று இதிலும் தாங்கள் நம்பர் 1 என்று நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள் ..

நம்ம ஊருக்கு வருவோம், இந்தியாவுக்கு கொரோனா வராது வந்தாலும் வெயிலுக்கு செத்துப் போயிடும் அப்படியே இருந்தாலும் நமக்கு வந்து எதிர்ப்பு சக்தி ரொம்ப ஜாஸ்தி, நொடிக்கு நொடி இப்படி ஒரு கதையை சொல்லி கிட்டு இருந்தோம். கடைசில உங்க பொடனிக்கு பின்னாடி தான் இருக்கிறேன் அப்படின்னு சொல்லி இப்ப நமக்கிடையே வந்துருச்சு.

அரசாங்கம் எடுத்துக் கொண்டிருக்கிற முயற்சி எல்லாம் என்ன கண்டிஷன்ல இருக்குதுன்னு யாருக்குமே தெரியல. முழுஅடைப்பு முழு அடைப்புகுள்ள முழு அடைப்பு இப்படியேதான் போய்கிட்டு இருக்கு.

எங்க பார்த்தாலும் முகமூடிகளும், வேலை இல்லா திண்டாட்டமும், இருக்கிற வேலையை விட்டு அனுப்புவது, பள்ளிக்கூடம் செல்லா குழந்தைகளும், ஊரடங்கு… ஊரடங்கு… ஊரடங்கு.. இது மட்டுமே கேட்டுகிட்டு மக்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறார்கள்

அடித்தட்டு மக்கள் மட்டும் பொழப்ப பார்க்கணும் என்று வேலைக்குப் போறது… வழக்கம் போல வெளியில் சுத்துறது… இப்படியே போய்கிட்டு இருக்காங்க. கொரோனாவுக்கு ஏழை…பணக்காரர் என வித்தியாசம் கிடையாது… மந்திரிக்கும் வரும் ஒரு கூலித் தொழிலாளிக்கு வரும்… இந்துவுக்கும் வரும்… முஸ்லிமுக்கும் வரும்… கிறிஸ்டியன்கும் வரும்.. அமிதாப்பச்சனுக்கு வரும்… பாகுபலி டைரக்டருக்கும் வரும்…

அந்த வகையில் இது ஒரு சமத்துவம் இருக்கிற நோய்தான்..

மக்களெல்லாம் முடக்கிப் போட்டு அரசாங்கங்களை ஸ்தம்பிக்க வைத்து அடுத்து என்ன பண்றதுன்னே தெரியாம குழம்ப வச்சு இந்த கொரோனா 2020அ அள்ளிக்கிட்டு போயிடுச்சு

நிறைய பொருளாதார அறிஞர்கள் சொல்ற மாதிரி 2020 ல இத பண்ணனும் அதை பண்ணனும்னு இருக்காம பிழைத்துக் கிடந்தால் போதும் என்று நினைத்து கொள்ள வேண்டியதுதான் கொண்டிருக்கிறோம்

இதுல இன்னும் பீதியை கிளப்பி விடும் விஷயம் என்னன்னா இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை 2020 முடிய இன்னும் அஞ்சு மாசம் இருக்கு

நாமே பாதுகாப்பாக இருப்போம்… மருத்துவர்கள நம்புவோம்… சமூக இடைவெளியை கடைபிடிப்போம்… கைகளை கழுவுவோம்.. முடிந்தவரைக்கும் வீட்டுக்குள்ளேயே இருந்து பிழைத்து கிடப்போம்…