jump to navigation

Little Rascals – குட்டி களவாணிகள் April 25, 2012

Posted by anubaviraja in சினிமா, நகைச்சுவை, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , ,
2 comments

எல்லாருக்கும் வணக்கம்.. ரொம்ப நாள் கழிச்சி இப்போ இந்த ப்ளாக் போஸ்ட் மூலமா உங்கள இம்சை பண்றதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி ;).. ஏதோ அழகர் புண்ணியத்துல இன்னிக்கு மதுரைல கரண்ட் போகம இருக்குறதுனால இத எழுத முடிஞ்சது … தமிழ் நாடு மின்சார வாரியத்துக்கு இந்த பதிவை சமர்ப்பணம் செய்கிறேன் 😉

இந்த ராஸ்கோலு  அப்படிங்கற வார்த்தை வேலைக்காரன் படத்துல VK ராமசாமி பிரபல படுதுனது 😉 இந்த Little Rascals படத்தோட DVD கெடைச்சதும் ஏதோ கொழந்த பசங்க படம் போல அப்படின்னு நெனைச்சி கிட்டு தான் பார்க்க ஆரம்பிச்சேன்.. ஆனா இது வேற வேற வேற மாதிரி படம் 😉 அப்படின்னு தெரிஞ்சிகிட்டேன்…

இந்த படம் ஒரு காதல் காவியம்… 😉 சின்ன குழந்தைகளோட உலகத்த அவங்க கூடவே இருந்து காட்சி படுத்தின மாதிரியான ஒரு கதை அமைப்பு … படத்துல வர்ற எல்லா கதாபாத்திரங்களும் (நியாயமா பார்த்தா கதா பசங்க அப்படின்னு தான் சொல்லணும் 🙂 ) கலக்கலா நடிச்சிருப்பாங்க…

(more…)

Source Code – சூப்பரா ஓடும் ரயில்.. June 8, 2011

Posted by anubaviraja in சினிமா, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , , , , , , ,
5 comments

ரொம்ப நாளைக்கு அப்புறமா ஒரு இங்கிலீஷ் படம் … அதுவும் நானா பார்க்கல நம்ப நண்பர் ஒருத்தர் சொன்னாருன்னு டவுன்லோட் பண்ணி வச்சாச்சி … இருந்தாலும் கூட ஒரு ரெண்டு நாளா பார்க்கல …

அப்புறம் ஒரு நாள் திடீர்ன்னு சும்மா கம்ப்யூட்டர் ல இருக்குற குப்பையை எல்லாம் பெருக்கி ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்பி கிட்டு இருக்கும் போது இந்த படம் எத்தேட்சயா கண்ணுல பட்டது.. ரைட்டு இன்னிக்கு பாத்துடலாம்ன்னு முடிவு பண்ணி … நாம தான் ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா நம்ப பேச்சை நாமலே கேக்க மாட்டோமே …. பார்க்க ஆரம்பிச்சாச்சி…

(more…)

ஆயிரத்தில் ஒருவன் – என்னை பாதித்தது ஏன் ??? January 31, 2010

Posted by anubaviraja in சினிமா, தமிழ், ரசித்தவை.
Tags: , , ,
2 comments

ஒரு வழியா எல்லாரும் ஆயிரத்தில் ஒருவன் படத்த எல்லாரும் கிழிச்சி தொங்க போட்டாச்சி 🙂 . படத்த பத்தி விமர்சனம் நல்ல படியாவும் இருந்திச்சி – மோசம்ன்னும் சொல்லிருந்தாங்க … ஆனா ட்ரைலர் பார்த்ததுமே படத்தபார்த்துடணும்ன்னு முடிவே பண்ணியாச்சி .. நமக்கு தான் “ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா நம்ப பேச்சை நாம்பளே கேக்க மாட்டோமே” 😉 …

பொங்கலுக்கு தான் ஊருக்கு போறோமே எப்பிடி படம் பாக்குறதுன்னு யோசித்த பொழுது … கண நேரத்தில் உதயமானது அந்த ஐடியா .. சிவகாசில தான் அட்லாப்ஸ் தியேட்டர் இருக்குதே , அதுக்கு ஆன்லைன் புக்கிங் இருக்குதான்னு  பார்த்தா – அட இருந்திச்சி பா . ரைட் புக் பண்ணிட்டு – பொங்கலுக்கு அடுத்த நாள் கெளம்பிட்டோம்  …

படத்தோட கதைய எல்லாரும் ஏற்கனவே சர்ப் போட்டு அலசிட்டதனால , இந்த படம் என்ன எப்படி பாதிச்சதுன்னு சொல்லிடறேன் …

  • வித்தியாசமான கதை களம் –   இந்த மாதிரி ADVENTURE STORY தமிழ்ல வந்து ரொம்ப நாள் ஆச்சின்னு  நெனைக்கிறேன்
  • ஹீரோக்கு படத்துல ஹீரோயசம் இல்லவே இல்லை (நெறைய எடத்துல கார்த்தி கைப்பிள்ளை மாதிரி அடி வாங்கிகிட்டு நிக்கிறார் 🙂 )
  • ஹீரோயின்க்கு படத்துல குடுக்கபட்டிருக்குற முக்கியத்துவம் – அதுவும் ரீமா சென் கெடைக்கிற பால் எல்லாத்தையும் சிக்ஸர் அடிச்சி கலக்கிட்டாங்க ..
  • ரொம்ப நாள் கழிச்சி பார்த்திபன் டபுள் செஞ்சுரி அடிச்சா மாதிரியான ஒரு அட்டகாசமான நடிப்பு
  • “இப்படை தளம் பெயர் என்ன .. இது குறித்து தாங்கள் விவரிக்கவே இல்லையே …அச்சப்படுவோம் என்றா …” பார்த்திபன் பேசுற இந்த டயலாக் – எனக்கு RANG DE BASANDHI கிளைமாக்ஸ் சீன் தான் ஞாபகம் வந்திச்சி
  • இங்கிலீஷ் படங்கள்ல மட்டுமே பார்த்த பிரமாண்டமான சண்டைகாட்சிகளை தமிழ் படத்துல கொண்டு வந்தது
  • சோழர்கள் பேசுற தூய தமிழ் வசனங்கள்

இதெல்லாம் எல்லருக்கும் பிடிச்ச அம்சங்கள் அப்படின்னு நெனைக்கிறேன் . இருந்தாலும் என்ன பாடிச்சதுக்கு முக்கியமான காரணம் – இலங்கை தமிழர்களின் வாழ்க்கைய படத்தின் காட்சிகள் பிரதிபலித்தது தான் .. (செல்வராகவனே இத இல்லைன்னு மறுத்திருந்தாலும் )

  • அவர்கள் பேசுற தமிழ் – இலங்கை தமிழ் மாதிரியே இருக்குறது ..
  • நம்பிக்கை துரோகத்தினால ஆபத்துல சிக்கிகிறது ..
  • நவீன ஆயுதங்களுக்கு முன்னாடி அவங்க கிட்ட இருக்குற பழைய வாள் கேடயத்த வச்சிக்கிட்டு சண்டை போடுறது
  • எதிரிகள் ஜெயித்தும் பெண்களை மானபங்க படுத்துறது
  • கடைசி நேரத்துல கூட கப்பல்ல உதவி வந்துராதான்னு பார்த்திபன் கண்ணுக்கு கப்பல் தெரியிறது

இப்படி சொல்லிகிட்டே போகலாம் .. இதுனால தான் நான் சென்னை வந்ததும் ஒரு தடவை INOX ல போய் இந்த படத்த பார்த்துட்டேன் .

எனக்கு தெரிஞ்சி இது பார்க்க வேண்டிய படம் தான். ஆயிரத்தில் ஒருவன் – கோடு போட்ருக்கார் , யாரவது ரோடு போடுங்களேன் பா …

உன்னை போல் ஒருவன் – என்னை போல் இல்லைங்க – நல்லாருந்திச்சி September 27, 2009

Posted by anubaviraja in சினிமா, பிடித்தவை.
Tags: , ,
6 comments

ஏற்கெனவே “வெட்னெஸ்டே” படத்தைத் பார்த்துவிட்டதால் எந்தவித எதிர்பார்ப்புமின்றி தான் போனேன். ஆனால் சும்மா சொல்லக்கூடாது. மூலப்படத்தின் அந்த இயல்பு கெடாமல் ரீமேக்கியிருக்கிறார்கள். மனைவியிடம் குக்கரால் அடிபடும் அப்பாவிக் கணவன், கமிஷனரிடம் புகார் கொடுக்க வரும் அந்த நடிகர் (விஜய்?) என்று ஒன்றையும் விடவில்லை.

மோகன்லாலுக்கு அசால்ட்டான பாத்திரம். சென்னை நகர கமிஷனர். கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தும்போது, லட்சுமியை சதாய்க்கும்போது, அதிகாரிகளை வழிநடத்தும்போது, கலக்கிங்க சாரே… லட்சுமி – தலைமைச் செயலர். முதல்வரிடம் பேசும் போது பம்முகிறார். மோகன்லாலிடம் எகிறுகிறார். இளம் போலீஸ் ஆஃபீசராக வரும் அந்த இருவரும் துடிப்பாக இருக்கிறார்கள். டிவி ரிப்போர்ட்டராக வரும் அந்தப் பெண் யாரையாவது முறைத்துக்கொண்டே இருக்கிறார். கேப் கிடைத்தால் தம்மடிக்கிறார். அவ்வளவுதான்…. கமல் – நன்றாக நடித்திருக்கிறார் என்று தனியாகச் சொல்ல வேண்டுமா? இது நடிகரின் படமாக இல்லாமல் கதையின் படமாக இருக்கும். அதற்காகவே கமலுக்கு நன்றிகள்.

கிளைமாக்ஸ் – நஸ்ருதீன் ஷா க்கு இந்த charecter சூட் ஆனா மாதிரி தெரியல இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, ஹிந்தியில் இந்தப் பாத்திரத்தின் வயது. கமலை ஒரு ஹீரோவாகத்தான் பார்க்கமுடிகிறது. நஸ்ருதீன் ஷா இந்தக் காரியத்தை செய்யக் காரணமாயிருந்தது பயம். உயிரோடு இருக்கவேண்டுமே என்ற சாமானியனின் பயம். தமிழில் அப்படியில்லை. அதனாலும் கமல் ஒரு ஹீரோவாகத்தான் தெரிகிறார். அப்புறம் முதல்வர் குரல் கலைஞர் குரல் போல இல்லை? அவரையும் கலாய்த்திருக்கிறார்கள். உன்னிப்பாகக் கவனியுங்கள்.

படத்துல பாட்டு எப்படி வரும்னு யோசிச்சிகிட்டே தான் போனேன் – பாட்டே இல்லாம எடுத்து இன்னும் சூப்பர். பாட்டெல்லாம் சூப்பர் மேடம் , கலக்கிடிங்க. நடிகர் அரசியலில் குதிப்பதும் பாதுகாப்புக் கேட்டு பந்தா பண்ணுறதுன்னு வரும் ஸ்ரீமன் – ஒரே கல்லில் ரெண்டு மாங்கா ?விஜய் பார்த்தால் கிடைக்கும் இடத்தில் தூக்கில் தொங்கலாம்.. கமல் படத்திலே இதை நான் எதிர்பார்க்கவில்லை.. ஆனா கொடுக்கவேண்டிய நோஸ் கட் தான்.. 😉

இறுதிக் காட்சியில் வரும் கம்பியூட்டர் இளைஞன் – சதிலீலாவதி சின்ன பய்யன் – ஆனந்து — தம்பிய் ஆனந்து ….

வித்யாசம் :

  • ஹீரோயின் இல்ல
  • குத்து பாட்டு இல்ல
  • படம் ரெண்டு மணி நேரத்துக்கும் கம்மியா தான் ஓடுது
  • ஹீரோஇசம் இல்ல

ஆனா நல்ல்ல படம் ! போய் பாருங்க….

உன்னைப்போல் ஒருவன் – கமல் போல் ஒருவன் (சான்ஸ் இல்லிங்கோ 🙂 )

no nation is perfect, but has to be made perfect August 15, 2009

Posted by anubaviraja in சினிமா, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , , , , ,
4 comments

எல்லாருக்கும் வணக்கம் ப்லாக் பக்கம்  பார்த்து ரொம்ப நாள் ஆச்சி … என்னங்க பண்றது கொஞ்சம் வேலை ஜாஸ்தி. இன்னிக்கு தான் நிம்மதியா ஒக்காந்து டைப் பண்ணுறதுக்கு நேரம் கெடைச்சது . சுதந்திர தினம் 🙂 ……. நல்லா தான் போய்கிட்டு இருக்கு. குசேலன் (ஷப்பா…) நடிகைகளோட பேட்டி அப்படின்னு பார்த்து நேரத்த போக்கிருப்பிங்க. ரொம்ப நாள சொல்லனுமுன்னு  நினைச்ச ஒரு விஷயம் மனசுல நிக்கிது அத இன்னிக்கு சொல்லிடறேன்.

நான் சென்னை வந்தப்ப ஒரு ஹிந்தி படம் கூட பார்த்தது கெடயாது . வந்ததும் கொஞ்ச நாள் வேலை தேடிக்கிட்டு இருந்தேனா , அப்போ பொழுது போகாம இருந்த சமயத்துல எங்க ரூம்ல இருந்த நெறைய ஹிந்தி DVDய பார்த்து டரியல் ஆகி இருந்தேன் , (நமக்கும் ஹிந்திக்கும் தான் மூணாம் க்ளாஸ்ல இருந்தே ஆகாதே ..)  அப்புறம் என்னோட ரூம் மேட் தான் சப்டைட்டில் போட்டு படாத பாக்கலாம்ம்னு சொல்லி என்னோட அறிவு கண்ண தெறந்து விட்டாரு. மொதல்ல என்ன பாக்க சொன்ன படம் Rang de Basanti

சரி நம்ம மாதவனும் சித்தார்த்தும் இருக்கங்கலேன்னு நம்பி பார்க்க ஆரம்பிச்சிட்டேன். படம் பார்த்து முடிச்சோடனே , இப்படி எல்லாம் நம்ம தமிழ் டைரக்டர்கள் யோச்சிக்க மாட்டாங்களான்னு தோனுச்சி.

இங்கிலாந்துல தான்னோட தாத்தாவோட ( சுதந்திர போராட்ட காலத்துல ஜெயிலரா இருந்தவரு) டைரிய படிக்கிற பேத்தி பகத் சிங் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள பத்தி படம் எடுக்கணும்ன்னு ஆசை பட்டு இந்தியா வர்றாங்க. அப்போ அவங்களுக்கு டெல்லி யுனிவேர்சிடில இருக்குற ஒரு குரூப் friend ஆயிடறாங்க. அந்த படம் எடுக்க ஆரம்பிக்கும் போது தான் சந்திரசேகர ஆசாத், பகத்சிங், ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்பகுல்லா கான் பாத்திரங்கள்ல நடிக்க அமீர் கான், சித்தார்த் அண்ட் கோ ஒத்துகிறாங்க.

அமீர் கான் குரூப் கொஞ்சம் வித்தியாசமானது . இந்து, முசுலீம், சீக்கியர், ஓவியர், அதிவேகமாக பைக் ஓட்டுறது , பீரை குடிச்சிகிட்டே உயரத்துல இருந்து  தண்ணீரில் குதிப்பவர்கள், இப்படிப்  ஆட்டமும், பாட்டமுமாய் நாளைக் கழிப்பவர்கள் (குஷியான க்ருப்புங்கோ) . தோழியின் காதலனான மாதவன் இந்திய விமானப்படையில் பைலட்டாகப் பணியாற்றுபவர்.  இந்தக் கும்மாளத்தில் அவ்வப்போது அவரும் கலந்துக்குவாறு.

ஆரம்பத்தில் இந்த படத்தை தமாசாகக் பாக்குற  நண்பர்கள் அந்த இங்கிலாந்து பெண்ணின் தீவிரமான அக்கறையை பாத்து  வசனங்களையெல்லாம் மனப்பாடம் செஞ்சி நடிக்கிறாங்க .

கடைசில  போராளிகள் தூக்கிலிடப்படும் காட்சிகளைத் திரையில் பாக்கும்  நண்பர்கள் சில கணங்கள் உறைந்து போகிறார்கள். அப்போ மாதவன், படித்தவர்கள் இராணுவத்துக்கும், ஐ.ஏ.எஸ்ஸுக்கும், அரசியலுக்கும் வரவேண்டும் என்கிறார். படவேலைகளுக்கு இடையே ஆட்டமும், பாட்டமுமான அவர்களது கொண்டாட்ட வாழ்க்கையும் தொடருகின்றது.

ஆனால் மிக்21 விமானத்தில் பறந்த மாதவன் விபத்தில் இறந்து போக நண்பர்களின் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை ஒரு முடிவுக்கு வருகிறது. விமானப்படையில் பல ஆண்டுகளாகப்  மிக்21 விமானங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாவது குறித்துப் புலனாய்வு செய்த என்.டி.டி.வி , தரங்குறைந்த மிக் ரக விமானங்களை வாங்கியதில் ஊழல் இருப்பதாக அறிவிக்கிறது. ஊழல் செய்த  மந்திரி விமானம் வாங்கியதில் ஊழல் ஒன்றுமில்லையெனவும், விமானம் விபத்திற்குள்ளானதற்கு பைலட்டின் தவறே காரணம் என்றும் அலட்சியமாகக் கூறுகிறார்.

ஆத்திரமடைந்த நண்பர்கள் முதன்முதலாக அரட்டைக்குப் பதிலாகக் கோபத்துடன் கூடி விவாதிக்கிறார்கள். தாங்கள் ஏற்று நடித்த புரட்சியாளர்களின் வசனங்களை இப்போது நிஜத்தில் பேசுகிறார்கள். இங்கும் ஆசாத்தும், பகத்சிங்கும், பிஸ்மில்லும் மாறி மாறி வந்து பேசுகிறார்கள். எது நிழல் எது நிஜம் என்ற பேதம் தெரியாதபடி விவாதம் நடைபெறுகிறது. இறுதியில் மந்திரியைக் கொல்வது என்று முடிவெடுக்கிறார்கள்.

அப்புறம் என்ன மந்திரி தியாகி ஆகிடறாரு….. (அரசியல்வாதிகள்னாலே தியாகிகள் தான பா ) . தங்களது கொலைக்கான நியாயம் இதன் மூலம் மறைக்கப்படுவது கண்டு கொந்தளிச்சி அதை உலகிற்குச் சொல்லுரதுன்னு   முடிவெடுக்கிறார்கள். ஒருநாள் அதிகாலையில் ஆல் இந்தியா ரேடியோவைக் கைப்பற்றி நேரடி ஒலிபரப்பில் தங்கள் தரப்பு நியாயத்தைத் தெரிவிக்கிறார்கள். தொலைபேசியில் வாழ்த்துக்களுடன் வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்கள். தொலைக்காட்சிகளிலும் இந்தச் சம்பவம் தலைப்புச் செய்தியாகக் காட்டப்படுகிறது.

இவங்கள  டேரரிஸ்டுன்னு    சொல்லி  அதிரடிப்படையை ஆலிந்தியா ரேடியோக்கு   அனுப்பி  நண்பர்கள் எல்லாரையும் போட்டு தள்ளிட்றாங்க . ஆவணப்படத்தில் தாங்கள் தூக்கிலிடப்படும் காட்சிகளை நினைத்தவாறே சிரிசசி கிட்டே  சாகிறாங்க . 😦

படத்துல ரெண்டு டயலாக் என்னோட மனசுள்ள நின்னது…..

மாதவனும் சித்தர்த்தும்  சொல்றது….

No nation is perfect, but has to be made perfect

ஜெயிலர் டைரில இருந்து ….

I always believed there were two kinds of men in this world, men who go to their deaths screaming, and men who go to their deaths in silence. Then I met a third kind.

கண்டிப்பா அந்த படத்த பாருங்க…. மிஸ் பண்ணிராதிங்க …

சிவா மனசுல சக்தி – சந்தானத்துக்கு ஆஸ்கார்…. July 19, 2009

Posted by anubaviraja in சினிமா, நகைச்சுவை, பிடித்தவை.
Tags: , , , , ,
6 comments

நீங்க இன்னும் யூத் தானா?? கண்டுபிடிக்கிறதுக்கு ஒரே வழி – ஒரே கேள்வி – உங்களுக்கு சிவா மனசுல சக்தி புடிச்சிருக்கா ?? ஆமாம் அப்படின்னா நீங்க யூத் இல்லினா நீங்க ஓல்ட் பார்ட்டி  . நான் எப்டின்னு கேக்குறிங்களா  ?    எனக்கு தான் படம் ரொம்ப பிடிச்சிருக்கே 🙂

ஒன்னும் புது கதை எல்லாம் இல்லைங்க , ஆரம்பத்துல ஹீரோ ஜீவா ஹீரோயின் கிட்ட மிலிடரி ஆபிசேர் அப்படின்னு டுபாகூர் விடுறாரு , அதே மாதிரி அந்த பொண்ணும் நான் air hostess அப்படின்னு   புளுகுது , கடைசில ஜீவா கூரியர் பையன், அந்த பொண்ணு ரேடியோ ஜாக்கி அப்படின்ன்னு தெரிஞ்சதும் மோதல் – காதல் – ஒண்னு சேரல்    அப்படின்னு வழக்கமான தமிழ் சினிமா கதை தான். ஆனா அத சொன்ன விதம் 🙂

ரொம்ப ஜாலியான  ஒரு கதை களம் எடுத்துட்டு டைரக்டர் சும்மா புகுந்து விளையாடிருக்குறார். படம் முழுக்க நகைச்சுவை பரவி கெடக்குது . என்ன பொருத்தவரைக்கும் இந்த்த படத்தோட உண்மையான  ரெண்டு   ஹீரோ ஒண்னு யுவன் – எல்லாமே அருமையான பாடல்கள். அப்புறம் நம்மாளு சந்தனம். கவுண்டர் ஸ்டைல் காமெடி இவருக்கு நல்லா கை குடுக்குது.

சில ஹைலைட் காமெடி :

  • முதல் தடவை பாருக்கு போகும் போது, மிச்சம் இருக்குற சைடு டிஷ் எல்லாம் carry பெக்ல  எடுத்து போட்டுட்டு , மினி பீர் வச்சிக்கிட்டு உட்கார்ந்டுருக்குற சத்யன பார்த்து டென்ஷன் ஆகும் போது ….
  • சக்திய தேடி ஏர்லைன்ஸ் ஆபீஸ் போய் ஷகீலாவ    பார்த்து ஜீவா அசிங்கப்பட்டு நிக்கும் போது விழுந்து  (நெஜமாவே ) விழுந்து சிரிக்கும் போது….
  • சத்யம் தியேட்டர் வாசல்ல – ப்ளாக் டிக்கெட் விக்கும் ஜீவாவ கலாய்க்கும் போது
  • கும்பல் of குர்காஸ்   அப்படின்னு பல்பு வாங்கிட்டு நிக்கும் போது ….
  • தியேட்டர் குள்ள போய் ஸ்க்ரீன் கிழிச்சி தூக்குல தொங்குன்னு ஜீவாவ செதைக்கும் போது…
  • ஒவ்வொரு தடவையும் “ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு felling ”   அப்படின்னு பஞ்ச் டயலாக் பேசும் போது…
  • ஒவொரு தடவையும் தன்னோட புது மொபைல் போன ஜீவா உடைக்கும் போதும் அழுமுஞ்சி ரியாக்சன் காட்டும் போது …
  • கடைசில பார்ல இப்போ அந்த பொண்ண உனக்கு பிடிச்சிருக்கு அப்டிங்க்ரியா ?? இல்லை அப்ப்டிங்க்ரியா ?? அப்படின்னு கேட்டு அதுக்கு ஜீவா சொல்லுற ” தெரியலையே மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் ” அப்படி சொல்லுறதுக்கு ரியாக்சன் குடுக்கும் போது …

பாஸ் கலக்கிடிங்க கீப் இட் up!!

நான் மட்டும் ஆஸ்க்கார் கமிட்டில இருந்தா இந்த வருசம் அவார்ட் சந்தனத்துக்கு தான் 🙂

நாங்களும் நாடோடிகள் தாங்கோ …. July 5, 2009

Posted by anubaviraja in சினிமா, சென்னை, பிடித்தவை.
Tags: , , , , , ,
add a comment

போன வாரம் ஞாயிற்று கிழமையே சும்மா இருக்க பிடிக்காம சங்கம் தியேட்டர்ல நாடோடிகள் படம் புக் பண்ணி பார்த்துட்டு வந்தாச்சி …அத ஒரு போஸ்ட் போடுறதுக்கு இவ்வளவு நாள் ஆயிரிச்சி 😦 . ஆறு மாசம் முன்னாடி சத்யம் தியேட்டர் போய் SLUM டாக் பார்த்தது . அப்புறமா போன வாரம் தான் சங்கம் பக்கம் தலை வச்சி படுத்துருக்கோம் . போன தடவை ஆபீஸ்ல ப்ரீயா கூட்டிட்டு   போனாங்க   இந்த தடவை என்னோட ரூம் மேட் 🙂

படம் பாக்குறதுக்கு முன்னாடி ஒரு பத்து விமர்சனம் படிக்குறது என்னோட வழக்கம் 🙂 அடே மாதிரி பார்ததேல்லாம் ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லிருந்தாங்க . ரைட் போல்லாம்னு கெளம்பிட்டோம்.

உண்மையிலேயே நல்லா தான் இருந்திச்சி , என்ன நான் உட்கார்ந்திருந்த சீட் சாயவும் முடியாம நிமிர்ந்து உக்காரவும் முடியாம இம்சை பண்ணிருச்சி , ரைட் படத்துல ஆழ்ந்துட்டதால  அது பெரிசா தெரியல … முழு கதையையும் சொல்ல எனக்கு தெரியாது ஆனா எல்லாரும் கை தட்டின சீன்கள் :

  • BA வரலாறு கோல்ட் மெடல் அப்படின்னு சசி குமார அவங்க அப்பா கிண்டல் பண்ணும் போது தன்னோட குடும்ப STD ய ( STDன்னா வரலாறு தான ?? )அவரு ஒப்பிகிராறு பாருங்க அப்போ ….
  • மொட்டை மாடியில தங்கச்சிய விஜய் ரூட் விடும்போது “எல்லாம் எங்களுக்கு தெரியும் டா வெண்ணைகளா ” அப்படின்னு சசிகுமார் சொல்லும் போது
  • கஞ்சா கருப்போட இன்றோடக்சன்  … அத தியேட்டர்ல பாருங்க 🙂
  • மாமாவுக்கு (சசி ) கொலகட்டை குடுத்துறலாம்னு எடுத்துட்டு வந்த ஹீரோயின் அத பரணி சாபிடுரத பார்த்து குடுக்கும் ரியாக்சன் … “அவனும் உன்னையே தான் சுத்திகிட்டு இருக்கான் பார்த்து செய் ” அப்படின்னு கசுவலா சசி சொல்லுறது …
  • “பட் மாமா உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ” – சசி பல கோணங்களில …
  • “முள்ளை பிடிச்சாலும் முழுசா பிடிக்கணும் டா” – சசி ; “போங்க டா நல்லா பிடிங்க ” கஞ்சா கருப்பு 🙂
  • விஜயோட அப்பா  லவ் லெட்டருக்கு சசி தங்கச்சி என்ன ரியாக்சன் குடுக்க்ரான்னு பாக்குறதுக்கு கூலிங்  கிளாஸ் சகிதம் வெயிட் பண்ணுறது
  • பரணி யோட அப்பா பாஸ்போர்ட் விசாரணைக்கு வந்த போலீஸ் கிட்ட்ட பரணிய பத்தி வண்டி வண்டியா திட்டிட்டு அப்புறம் காட்டுற ரியாக்சன்
  • அஞ்சி நிமிசத்துல எடுத்த போடோவ பிளேக்ஸ் போடா   மாத்திட்டு போற அரசியல் வாதி சின்ன மணி அண்ணன் 😉

இன்னும் நெறைய ….

இந்த படம் பார்த்துட்டு வந்த பிறகு friend லவ் பண்ணி சேர்த்து வைடா அப்படின்னு வந்து நின்னா ஒரு அஞ்சி நிமிஷம் யோசிக்க வச்சதுல சமுத்திர கனி சக்சஸ் கனி ஆயிருக்குறார் 🙂

அடுத்து என்ன்ன ரொம்ப பாதிச்ச SMS …. நெக்ஸ்ட் மீட் பண்ணலாம் 🙂

அப்புறம் பதிவோட தலைப்புக்கு என்ன அர்த்தம்ன்னு யோசிக்குரிங்களா ??? படம் பார்த்துட்டு வந்ததும் திங்கள் கிழமை எங்க ஹவுஸ் ஓனர் விடு காலி பண்ண சொல்லிடாரு .. இப்போ புரியுதா ??? 😉

காட் பாதர் படமும் .. நான் ரசித்த சர்கார் ராஜும் April 26, 2009

Posted by anubaviraja in சினிமா, ரசித்தவை.
Tags: , , , , , , , , , ,
1 comment so far

உலக சினிமாலாம் பார்க்க ஆரம்பிச்சிடோம்ல..   காட் பாதர் பாக்கலைனா எப்பிடி ?? (நம்ப தல அஜித் நடிச்சது இல்லிங்கோ )

DVD வாங்கிட்டு வந்தாச்சி , அதுவும்  காட் பாதர் 1-2-3 எல்லாம் சேர்த்து ஒரே DVDல

1970ல வெளி வந்த  படம் . முழுக்க முழுக்க நிழல் உலக தாதாகளை பத்தின கதை.  இத பார்த்து தான் நாயகன்  படம் எடுத்ததா சொல்லுவாங்க (வீர தளபதி ரித்திஷ் நடிச்சது இல்லைங்க ஒலக நாயகன் கமல் நடிச்சது 😉 ) மிகவும் மெதுவாக ஆனா பரபரப்புக்கு குறைவில்லாம சிறப்பா படத்த எடுத்திருப்பாங்க.

எல்லாம் மாபியா கும்பலுக்குள்ள நடக்குற பிரச்சனையயும் அவங்க செயல் படுற விடத்தையும் அழகா படம் பிடிச்சிருப்பாரு .  மர்லன் பிராண்டோ தான் காட் பாதர்.. அவருக்கு மூணு  பசங்க ஒரு பொண்ணு .. அந்த  நகரத்தையே ஆட்டி வைக்கிற நிழல் உலக நாயகன் 🙂 அவரு  தான் . மூத்த பையன் கோபக்காரன் , ரெண்டாவது பையன் கொஞ்சம் டியுப் லைட் மூணாவது பையனுக்கு, இந்த மாதிரி அடி தடி சண்டை எல்லாம் பிடிக்காது . அவன் காலேஜ் முடிச்சிட்டு ராணுவத்துல சேரணும்னு ஆசை படுறான் .

விதி வலியது இல்லியா , அப்பாவ யாரோ சுட்டுடுறாங்க , அவரு குத்துயிரும் , கொலயுயிருமா ஆஸ்பத்திரியில கெடக்காரு. மூத்த பையனுக்கு டென்சன் … ஒன்னும் செய்ய தெரியல .. சோ மூணாவது பையன் ( அல் பக்னோ ) பொறுப்பெடுத்து எதிரிகள போட்டு தள்ளிட்டு எஸ்கேப் ஆயிடுறாரு.

கடைசியில அண்ணன்காரனையும் வேற சில எனிமீஸ் அட்டக் பண்ணி கொன்னுடறாங்க . அல் பக்னோ புல் பொறுப்பெடுத்து எப்பிடி விக்ரமன் படத்துல ஒரு பட்டுலையே குடும்பம் முன்னேறுதோ அதே மாதிரி  ஒரு அஞ்சு நிமிச சர்ச் சீன்ல அண்ணன் மரணத்துக்கு காரணமானவங்க எல்லாரையும் அவரோட ஆளுங்கள வச்சி போட்டு தள்ளுறாரு .  அவரு அவரோட தங்கச்சி பையன தத்தெடுத்து முடிக்கும் போது,  All Enemies finished 🙂 . அந்த சீன் பிரம்மாதமா எடுத்துருபாங்க. அதே மாதிரி தமிழ்ல தலை நகரம் படத்துல எடுக்க முயற்சி பண்ணிருப்பாங்க (அதாங்க நம்ம தலை நாய் சேகர் வேசத்துல பின்னுவாரே அதே படம் தான் 🙂 )

காட் பாதர் மர்லன் ப்ரண்டோவோட நடிப்ப அப்பிடியே உள்வாங்கி நடிச்சிருப்பாரு நம்ப நாயகன் கமல். படத்துல ஒரு சூப்பர் சீன் என்னனா ஒரு ஹாலிவுட்  தயாரிப்பாளர் நம்ம  காட் பாதர் சொல்லுற ஆளுக்கு சான்ஸ் குடுக்க மாட்டேன்னு சொல்லி இன்சல்ட் பண்ணிருவாரு , அன்னிக்கு நைட் அவரோட படுக்கையில  ( அட கற்பனைய அலைய விடாதிங்க  பா 😉 ) அவரு செல்லமா வளர்த்த காஸ்ட்லி குதிரையோட தலை இருக்கும்  (மொரட்டுத்தனமா யோசிசிருக்கங்கள்ள ..)

அதுக்கப்புறம் ஹிந்தில காட் பாதர் படத்த   பேஸ் பண்ணி ராம்கோபால் வர்மா எடுத்த அமிதாப் & அபிசேக் கலக்குன சர்கார் & சர்கார் ராஜ் படம் பாத்தேன் . சும்மா சொல்ல கூடாதுங்க அது அப்பிடியே காட்பாதேரோட இந்திய பதிப்பு.

அந்த ரெண்டு படத்த பத்தியும் நேயர் விருப்பமான  மட்ரிக்ஸ் 2&3 பத்தியும் அடுத்து சில போஸ்ட் 😉

அடுத்த ஹிந்தி படம்… April 15, 2009

Posted by anubaviraja in சினிமா, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , , , , ,
2 comments

என்னடா இவன் ஹிந்தி பட விமர்சனமா எழுதி தள்ளுரானே , பெரிய ஹிந்தி பண்டிட் போலன்னு நேனைசிகாதிங்க… ஸ்கூல் படிக்கிற காலத்தில ஹிந்தி எக்சாம் ப்ராத்மிக் மட்டும் தான் முப்பத்தஞ்சி மார்க் வாங்கி பாஸ் , ரெண்டாவது பரிட்சைக்கு படிக்க போய்ட்டு பாதிலேயே எஸ்கேப் ஆனவங்க தான் நாங்கல்லாம் 🙂

இந்த வாரம் கையில சிக்கின DVD தோஸ்தானா. திரும்பவும் அபிசேக் படம் … ஒரு மாதிரி ஏடாகூடமான சப்ஜெக்ட் , இந்த பில்டப் எல்லாம் இருந்தாலும் சரி பர்துரலாமேன்னு உட்கார்ந்தாச்சி. ஆனா உண்மையிலேயே ரெண்டு டாப் ஹீரோக்கள் இந்தா மாதிரி ஒரு கதைல நடிக்கிறதுக்கு … அதுக்காகவே அபிசேக்கையும் ஜான் அப்ரகாமையும் பாராட்டனும்.

இங்க சென்னைல எப்பிடி பச்சிலருக்கு வீடு குடுக்க மாட்டிகிரான்களோ அதே மாதிரி அமெரிக்காவில போடோகிராபரா இருக்கிற ஜானுக்கும் நர்ஸா 😉 இருக்குற அபிசேக்குகும் வீடு கெடைக்க மாட்டிக்கிது . சந்தர்ப்ப சூழ்நிலையால ரெண்டு பேரும் gay couple அப்படின்னு சொல்லி வீட்ட வாடகைக்கு எடுதுடுறாங்க . அப்புறம் பார்த்தா அதே வீட்டுல பிரியங்கா சோப்ரா தங்கிருக்காங்க. அப்புறம் என்ன வழக்கம் போல முக்கோண காதல் கதை தான் 🙂

தலை அபிசேக் இந்தா படத்துலயும் நடிப்பு பிச்சி உதறிட்டாரு. அதுலயும் ஒபெனிங் சீன் நீ எதுக்கு போயும் போயும் ஒரு நர்ஸ் வேலைக்கு சேந்தன்ணு வெள்ளைகார பெருசு ஒருத்தரு கேட்பாரு .. அப்போ பார்த்து ஒரு பாரின் லேடி போடி வாஷ் பண்ண கூப்பிடுவாங்க பாருங்க ..இது சும்மா சாம்பிள் தான் படம் புல்லா இது மாதிரி தான் …

கடைசில காத்திருந்தவங்க பொண்டாட்டிய நேத்து வந்தவன் தள்ளிட்டு போன மாதிரி வேற யாரோ ஒருத்தரு ப்ரியங்காவ கட்டிகுராறு (அதுவும் ரெண்டாந்தாரமா 😦 ) ரைட் அத விடுங்க படம் முழுசும் ஒரே A தனம் . அபிசெகோட அம்மா ஜானுக்கு ஆரத்தி எடுத்து பொட்டு வச்சி மருமகளா எத்துகுறது எல்லாம் ரொம்ப சாதாரண சீன் 🙂

ஆனா காமெடி படம்ங்ரதால ரசிக்க முடிஞ்சது . எனக்கு படம் முடிஞ்சதும் ஒன்னே ஒன்னு தான் தோணிச்சி . ஒரு வேளை ஒரு அஞ்சாறு வருஷம் கழிச்சி இந்த படத்த தமிழ்ல எடுத்தா S.J. சூர்யாவும் சிம்புவும் நடிக்கலாம் 😉

நான் பார்த்த ஹிந்தி படம் …. April 5, 2009

Posted by anubaviraja in சினிமா.
Tags: , , , , ,
6 comments

kabhi_alvida_naa_kehna

போன வாரம் ஞாயிற்று கிழமை ரொம்ப போர் அடிச்சது . சரி பாரிஸ் கார்னர்ல வாங்கிட்டு வந்த எல்லா DVD உம் பார்த்தாச்சே என்ன பண்ணுறதுன்னு தெரியாம உட்கார்ந்துகிட்டு இருந்தேன் . சரி இந்த படம் சும்மா தான இருக்குன்னு எடுத்தேன். படத்தோட பேரு கபி  அல்விதா நா  கேஹனா. என்னோட அண்ணனும் , எங்க ஆபீஸ்ல வேலை பாக்குற ஒருத்தரும் ஏற்கனவே அந்த படத்தோட கதைய லைட்டா சொல்லிருந்தாங்க… தயவு செஞ்சி பாத்துறாதடான்னு வேற   சொல்லிருந்தாங்க.

ஆனா  போனவாரம் சர்கார், அப்புறம் சர்கார் ராஜ் பார்த்ததுல இருந்து அபிசேக் பச்ச்சனோட பெரிய  பேன் ஆயிட்டேனா , சரி பார்துரலாமேனு  உக்கார்ந்தேன்.

படத்துல ஆரம்பத்துல அபிசேக் பச்சனுக்கும் ராணி முகர்ஜிக்கும் கல்யாணம் நடக்குது ..
அபிஷேக்கோட அப்பாவா அமிதாப் வர்றாரு. அப்புறம் ஷாருக் கான் ஒரு புட்பால் playeraa வராரு. அவரோட மனைவி ப்ரீத்தி ஜிந்தா. சரி பேமலி சப்ஜெக்ட் தான்னு நம்பி உட்கார்ந்துட்டேன் . ஐயோ .. இவரு பொண்டாட்டிய அவரு காதலிக்கிறது .. அவரு பொண்டாட்டிய இவரு காதலிக்கிறது .. வாரே வா என்ன ஒரு குடும்ப காவியம் .

அதுல அமிதாப் வேற ப்ளே பாய் 😦 . சர்கார்ல நான் பார்த்த அமிதாப்பே வேற.. ரைட் விடுங்க. ஷாருக்கோட அம்மா கூட அவருக்கு வேற லவ் … போதும்டா சாமி .. இப்பிடி ஒரு படத்த இனி வாழ்கையிலேயே பார்க்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டு கிளைமாக்ஸ் பர்துருவோமேன்னு உட்கார்ந்தேன் . அதுல ஒரு சீன், அபிசேக் அவரோட பொண்டாட்டி ராணி முகர்ஜிய கொஞ்சுராறு.. அத பார்த்துட்டு ஷாருக் டென்சன் ஆகுறாரு  பாருங்க அப்போ தான் எனக்கும் டென்ஷன் ஆச்சி.

இத தான் எங்க தலை அன்னிக்கே சொன்னாரு . “ஊரா டா இது , இவன் பொண்டாட்டிய அவன் வச்சிருகேங்க்றான் ,   அவன் பொண்டாட்டிய இவன் வச்சிருகேங்க்றான் ,  ….”
அது மாதிரி ஆயிரிச்சி . கடைசில ஷாருக்கானும் ராணி முகர்ஜியும் ஒன்னு சேருறாங்க பாருங்க …. ஷப்பா…  அப்ப தாங்க எனக்கு கண்ண கட்டுச்சி…

ரைடு.. இது மாதிரி குடும்ப காவியமெல்லாம் ஹிந்தில தான் எடுக்க முடியும் , தமிழ்ல எடுத்தா … நெனைச்சி பார்கவே பயமா இருக்குங்க …