jump to navigation

FlashMob – பப்ளிக் பிளேஸ்ல பெர்பாமான்ஸ் பண்றது December 21, 2011

Posted by anubaviraja in சென்னை, செய்திகள், நடந்தவை, ரசித்தவை.
Tags: , , , , ,
trackback

கொலவெறி வெற்றிக்கு அப்புறமா இப்போ YouTube தான் ரொம்ப பாப்புலரா ஓடிகிட்டு இருக்கு..  கொஞ்ச நாளா trending topic ல FlashMob, FlashMob… அப்படின்னு ஒன்னு ஓடிகிட்டு இருக்கு… எல்லாம் நமக்கு Facebook மூலமா கெடைக்கிற அப்டேட் தான்..

நான் கூட FlashMob அப்படின்னா Flashல செஞ்ச அனிமேஷன் அப்படின்னு நெனைச்சிக்கிட்டு இருந்தேன்… அப்புறம் தான் அதுக்கு அர்த்தம் பப்ளிக் பிளேஸ்ல பெர்பாமான்ஸ் பண்றது அப்படின்னு நம்ம Wikipedia அண்ணாத்த சொன்னாரு . உலகத்துல பல இடங்கள்ல நடந்துகிட்டு இருக்குற FlashMob இப்போ நம்ம நாட்டுலயும் வந்துறிச்சாம் பாசு… FlashMob அப்படிங்கறது பப்ளிசிட்டி, விளம்பரம் இது போன்ற விசயங்களுக்காக செய்றது..

 

ஒரு போது இடத்துல ஒருத்தர் டான்ஸ் ஆட ஆரம்பிச்சி அத அப்படியே எல்லாரும் பிக் அப் பண்ணி ஆடுரதுக்கு பேர் தான் FlashMob. அதுக்காக மானாட மயிலாட கலா அக்கா வந்து கெமிஸ்ட்ரி சரி இல்ல பயாலஜி நல்லா இல்ல அப்படின்னு எல்லாம் சொல்ல மாட்டங்க..ஆனா கூட்டு முயற்சி அப்டிங்கரதுனால பார்க்குறதுக்கு அருமையா இருக்கும்.. சின்ன பசங்கள்ள ஆரம்பிச்சி … வயசான பட்டி வரைக்கும் எல்லாரும் முழு மனசோட டான்ஸ் ஆடுறத பார்க்குறது நிச்சயமா ஒரு இனிமையான அனுபவம் தான் 🙂

முதல் முதல்ல மும்பை FlashMob தான் வந்ததுன்னு நெனைக்கிறேன் .. ரொம்ப புகழ் வாய்ந்த CST ரயில்வே ஸ்டேஷன்ல வச்சி 200 க்கும் மேற்பட்ட போது மக்கள் ரங்க்தே பாசந்தி பாட்டுக்கு ஆடினது…. கண்கொள்ளா காட்சி…

அப்புறம் நம்ம கேரள சேட்டன்கள் கொச்சில அமைதி வேண்டி

சென்னைல – ஆமா ஆமா – கொலவெறி யே தான் …

அப்புறம் கொல்கொத்தா ல

இதெல்லாம் பத்தாதுன்னு நியூசிலாந்துலயும் கொலவெறி தல விரிச்சி ஆடிருக்கு ….

இத பத்தி உங்க கருத்து என்ன??? நாட்டை உலுக்கும் எத்தனையோ பிரச்சனைகள்  இருந்தாலும் (சனி பெயர்ச்சி, சசி பெயர்ச்சி, முல்லை பெரியாறு, அன்னா.. ) நம்ம மக்களுக்கு இது மாதிரியான விஷயங்கள் தான முக்கியம்.. 😉

Comments»

No comments yet — be the first.

Leave a comment